செய்திகள் – Page 573 – Tamil VBC

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

பதவிக்காலம் நிறைவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தினை ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ‘இம்மாதத்துடன் ஆட்சிக்காலம் நிறைவடைந்து கலைகின்ற... Read more »

வித்தியா கொலைக்கு நீதி வேண்டி போராடிய அனைவருக்கும் நன்றி கூறும் வித்தியாவின் தாயார்!

என்னை போல எந்தவொரு தாயும் இனி அழக்கூடாது என புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலேகநாதன் சரஸ்வதி தெரிவித்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த வித்தியா தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகள் ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.... Read more »

ads

சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!!- யாழ் மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று... Read more »

வித்தியா வன்புணர்வின் பின்னரே கொலை செய்யப்பட்டார்! உறுதி செய்தது தீர்ப்பாயம்

கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகின்றது. யாழ். மேல் நீதிமன்றில் கூடியுள்ள தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார். 2ஆம் (பூபாலசிங்கம் ஜெயக்குமார்), 3ஆம்... Read more »

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரை!

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசிற்காக தெரிவு செய்யப்படப்படக் கூடியவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்த பரிசிற்காக தகுதி பெற்றவர்களின் பட்டியலொன்றை ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது.... Read more »

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயலட் பார் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பிலான அமர்வு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர்... Read more »

இலங்கை அபாய நிலையை எதிர்கொண்டுள்ளது! பிரபல சோதிடர் எச்சரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்கள் வரை இலங்கை கடுமையான அபாய நிலையை எதிர்கொண்டுள்ளதாக பிரபல சோதிடர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு விரிவான நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள அவர், இன்று தொடக்கம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் திகதி வரை... Read more »

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இருந்த விலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3 டொலரினால் உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய உலக சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 312 டொலரினால் பதிவாகியுள்ளது Read more »

இலங்கையில் மரக்கறி உண்போருக்கு காத்திருக்கும் பேராபத்து

நாளாந்தம் மக்கள் உணவுக்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் குறிப்பிடதக்க அளவு ஈயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகளை மேற்கொண்ட சிறப்பு மருத்துவர் டீ.பீ ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார். அரிசி மற்றும் மரக்கறிகளில் அதிகளவு ஈயம் அடங்குவதாக... Read more »

இலங்கை அரசுக்கு கண்டிப்பான கருத்தொன்றை கூறியுள்ள கூட்டமைப்பு

இலங்கையில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கு முன்னரும் புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே நடத்தப்படவேண்டும் என்று அரசிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் டிசெம்பரில் நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள... Read more »