பிரதான செய்திகள் – Page 367 – Tamil VBC

சுதந்திரக் கட்சியிலிருந்து மஹிந்த அணிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் திடீர் பல்டி!

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அம்பாறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்துள்ளனர். டப்ளியூ.டி. வீரசிங்க, சந்திரா தெவரப்பெரும, டி.எம். ஜயசேன ஆகிய மாகாண... Read more »

பொங்கல் பொங்கியும் வெடி கொளுத்தியும் வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பை வரவேற்ற யாழ் நகரப் பெண்கள்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை வரவேற்று யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வெடிகள் கொழுத்தப்பட்டதுடன், பெண்கள் பொங்கலும் பொங்கினர். வித்தியா கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தீர்ப்பாயத்தால் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை... Read more »

ads

வட கொரியர்களுக்கான விஸா வழங்கல் நடைமுறையை இறுக்கமாக்கப் போகும் இலங்கை!

இலங்கை வர விரும்பும் வடகொரியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.   தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகளையடுத்து வடகொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு கடந்த பதினைந்தாம் திகதி... Read more »

ஜனாதிபதி மைத்திரியின் விசேட பணிப்பிற்கு அமைய நுகர்வோருக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்!

நாடு முழுவதிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உத்தரவுக்கு அமைய இன்று முதல் இந்த நடைமுறை அமுலாகின்றது. அதற்கமைய அரிசி, பெரிய வெங்காயம், கிழங்கு ஆகிய பொருட்கள் இன்று முதல் குறைந்த விலையில் விற்பனை... Read more »

நாங்கள் எவரும் குற்றவாளிகள் அல்லர்- நீதிமன்றில் அடம்பிடித்த சுவிஸ்குமார்!

வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு பேரும், தாம் குற்றமற்றவர்கள் என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிடம், உங்களுக்கு ஏன் மரண தண்டனை வழங்கக்கூடாது? என்று நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்த குற்றவாளிகள் தாம் இந்தக்... Read more »

வித்தியா வழக்கில் விடுதலையானவர் மீண்டும் கைது!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.... Read more »

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

பதவிக்காலம் நிறைவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தினை ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ‘இம்மாதத்துடன் ஆட்சிக்காலம் நிறைவடைந்து கலைகின்ற... Read more »

வித்தியா கொலைக்கு நீதி வேண்டி போராடிய அனைவருக்கும் நன்றி கூறும் வித்தியாவின் தாயார்!

என்னை போல எந்தவொரு தாயும் இனி அழக்கூடாது என புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலேகநாதன் சரஸ்வதி தெரிவித்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த வித்தியா தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகள் ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.... Read more »

சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!!- யாழ் மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று... Read more »

வித்தியா வன்புணர்வின் பின்னரே கொலை செய்யப்பட்டார்! உறுதி செய்தது தீர்ப்பாயம்

கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகின்றது. யாழ். மேல் நீதிமன்றில் கூடியுள்ள தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார். 2ஆம் (பூபாலசிங்கம் ஜெயக்குமார்), 3ஆம்... Read more »