யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினமும் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையில் இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த வாரம் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண்டுகள் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டன.இந்த நிலையில், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான போராட்டமொன்றை இன்று நடத்த விருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு நாளைய தினம் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.