வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது! – Tamil VBC

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயலட் பார் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான அமர்வு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் சற்று முன்னர் கூடியுள்ளது.

தற்போது வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசிக்க தொடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *