வெற்றிக்கக் காரணம் விஜய் சங்கருக்கு கொடுத்த கடைசி ஓவர் – அது தோனி கொடுத்த ஐடியா – கோலி ஓபன் டாக் – Tamil VBC

வெற்றிக்கக் காரணம் விஜய் சங்கருக்கு கொடுத்த கடைசி ஓவர் – அது தோனி கொடுத்த ஐடியா – கோலி ஓபன் டாக்

விஜய் சங்கருக்கு கடைசி ஓவர் கொடுத்தது தோனி, ரோகித் சர்மா கொடுத்த ஐடியா என்று கேப்டன் விராட் கோலி கூறினார்.


நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்திய அணி தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம், விஜய்சங்கர் அற்புதமாக வீசிய கடைசி ஓவர் ஆகும். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் மற்றும் மூன்றாவது பந்தில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி விஜய்சங்கர் அசத்தினார். பும்ரா, சமிக்கு ஓவர்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இக்கட்டான நிலையில் கடைசி ஓவரை விஜய்சங்கர் வீசினார்.

வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, “விஜய்சங்கருக்கு 46வது ஓவரை கொடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். பின்னர், ரோகித், தோனியிடம் பேசினேன். சமி, பும்ரா முதலில் பந்துவீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தட்டும். அவர்கள் ஓவரில் விக்கெட்கள் வீழ்ந்துவிட்டால் நாம் முன்னிலையில் வந்துவிடுவோம். சரியாக அதுதான் நடந்தது. விஜய்சங்கர் அற்புதமாக பந்துவீசினார். துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் களத்தில் ஆலோசனை செய்வது ஆரோக்கியமாக இருக்கும். தோனி எப்பொழுதே எங்களுடன் இருப்பார்” என்று கூறினார்.

இந்திய அணியின் வெற்றிக்கு காரணங்கள்:-

விராட் கோலியின் சதம்

விஜய்சங்கர் அடித்த 46 ரன்

ஜடேஜாவின் ஹேண்ட்ஸ்ஹோம் ரன் அவுட்

கடைசி கட்டத்தில் பும்ரா எடுத்த இரண்டு விக்கெட்

கடைசி ஓவரில் விஜய்சங்கர் எடுத்த இரண்டு விக்கெட்

Thank you:Puthiyathaimurai.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *