Facebook Page பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு..!! களவாடப்பட்டு வரும் Facebook Page.!! - Tamil VBC

Facebook Page பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு..!! களவாடப்பட்டு வரும் Facebook Page.!!

நீங்கள் Facebook இல் page run பண்றிங்களா? அவதானம்‼️சமீப காலமாக இலங்கை முக நூல்கள் பல ஹக் பண்ணப்பட்டு பேஜ்கள் களவாடப்பட்டு வருகின்றது எல்லாரும் அறிந்த விடயமே.இதை ஒரு / ஒன்றுக்கு மேற்பட்ட சில குழுக்களே மிக எளிதான ஒரு loophole மூலம் திறம்பட செய்கின்றனர்

முதலில் உங்கள் பேஜ் க்கு முகப்புத்கத்தின் support site ஒன்றின் பெயரில் உருவாக்கப்பட்து போன்ற பேஜ் ஒன்றில் இருந்து மென்சன் பண்ணி “ உங்கள் பேஜ் நடைமுறை விதிகளை மீறியுள்ளதாகவும் / உங்கள் பேஜ் மீது ரிப்போட் வந்துள்ளதாகவும் அதை சரி பாக்க / உறுதிப்படுத்த கீழ் உள்ள இணைப்ப கிளிக் செய்யுமாறும் கூறப்பட்டிருக்கும் ( screen shoot ஐ பார்க்கவும் )~ மேலும் உங்களை

விரைவாக செயற்படுத்தவும் சிந்தித்து முடிவெடுப்பதை தடுக்கவும் 24 மணினேர கால அவகாசமே உள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கும்.~ இதில் குறிப்பிடப்பட்டுள்ள லிங் கை கிளிக் செய்ததும் அதில் உங்கள் முகப்புத்தகத்தை லாக் இன் செய்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்படி கேட்கப்படும் அதில் லாக் இன் செய்யும் பட்சத்தில் உங்கள் முகப்புத்தக கணக்கு விபரங்களை இலகுவாக அவர்களால் திருடிக்கொள்ள முடியும்.

இதில் இருந்து பாதுகாப்பாக இருக்க.உண்மையாகவே facebook இடம் இருந்து எந்த ஒரு தகவலும் உங்கள் கணக்கு சம்மந்தமாக வருவதாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் ( நீங்கள் மட்டும் பார்க்ககூடியவாறு ) support box மூலமாகவோ அல்லது mail மூலமாகவோ மட்டுமே அறிவிக்கப்படும் public pageஇல் எந்த ஒரு தனிப்பட்ட கணக்கு சம்மந்தப்பட்ட தகவலும் முகப்புத்தகம் பகிராது. அப்படி பகிரப்படும் / கோரப்படும் அனைத்தும் போலியே

ஒரு வேளை இவ்வாறான லிங் களில் லாக் இன் செய்துவிட்டால் உடனே என்ன செய்வது..?நாம் லாக் இன் செய்த உடனே கண்டிப்பாக அவர்களால் நம் பாஸ்வெர்ட்டை கண்டுபிடிக்க முடியாது அதை விரிவு படுத்த வேண்டும் அதற்கு சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரங்கள் வரை தேவைப்படலாம் ( நம் பாஸ்வேர்ட் ஐ பொறுத்து மாறுபடும் )

ஆகவே அப்படியான லிங்களில் தவறுதலாக லாக் இன் செய்து விட்டால் உடனடியாக உங்கள் பாஸ்வெர்ட் டை மாற்றுவதுடன் “லாக் அவுட் ப்றெம் அதர் டிவைஸ் ( log out from other devices ) “ என்பதை கண்டிப்பாக கொடுத்துவிடுங்கள்.மேலும் நீங்கள் உங்கள் பாஸ் வெர்ட் மாற்ற முதல் உங்கள் கணக்கில் யாராவது மாற்றம் செய்திருக்கின்றார்களா என அறிந்துகொள்ள


Setting இல் Security and log in பகுதில் “ I think my account was hacked “ என ஒரு ஆப்சன் இருக்கும் அதில் சென்று சமீபத்தில் உங்கள் முகப்புத்தகத்தில் செய்த மாற்றங்கள் , பதிவுகள் அனைத்தும் மீண்டும் ஒருமுறை நீங்களா செய்தீர்கள் என முகப்புத்தகமே வினாவும் அதில் ஆம் / இல்லை என சொல்வதன் மூலம் சரி செய்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

தயவு செய்து முடிந்தளவு இவ்வாறன திருடர்களிடம் இருந்து கவணமாக இருங்கள்.. இன்றைய காலத்தில் சிலருக்கு பேஜ் just for fun க்கா இருந்தாலும் சிலர் அதன் மூலம் வருமானத்தை நம்பி ( online business) வாழ்கின்றார்கள் இத்தகய சூழலில் பேஜ் & பாலாவர்ஸ் திருப்படுவது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.. கவனமாக செயற்படுங்கள்.முடிந்தளவு தெளிவாக கூற முயற்சித்துள்ளேன்
சந்தேகம் இருந்தால் comment box / inbox இல் கேளுங்கள் நிச்சயம் பதில் தெரிந்தால் விளக்கி கூற முயற்சி செய்கின்றேன் நன்றி Pranavan Kanna

ads

Recommended For You

About the Author: Admin