உங்க பிறந்த தேதிய கூட்டுனா 7 வருதா? அப்போ இதப்படிங்க! - Tamil VBC

உங்க பிறந்த தேதிய கூட்டுனா 7 வருதா? அப்போ இதப்படிங்க!

ஜோதிடத்தில் கைரேகை, கிளி, நாடி என பல வகைகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விஷமாக ஜோதிட பலன்கள் கூறுவார்கள். இவற்றுள் ஒன்று தான் எண் கணித முறை. இதில், ஒவ்வொரு எண்ணை வைத்தும் ஒருவரது வாழ்க்கை எப்படி அமையும் என கூறப்படும்.

அந்த வகையில் ஒருவரது பிறந்த தேதியை கூட்டினால், எண் 7 வந்தால், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என இங்கு காணலாம்.
7ம் எண்ணின் அதிபதியாக இருப்பது கேது பகவான். கேது பகவானை ஞானகாரகன் என்றும் கூறுவர்.இவர்களுக்கு திருமணம் நடந்தாலும் கூட, கணவன் – மனைவி உறவில் ஏதாவது காரணத்தால் சண்டை, பிரச்சனைகள் எழும்.

பிறந்த தேதி மட்டுமின்றி, திருமண நாளின் கூட்டு எண் 7 என வருபவர்களுக்கும் இந்த தாக்கம் இருக்கிறது என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.திருமண தேதியை நாம் கூட்டு எண் 7 வராமல் தடுக்கலாம். ஆனால், பிறந்த தேதி கூட்டு எண் 7 வருவதை நாம் தடுக்க முடியாது.

எனவே, பிறந்த தேதி கூட்டு எண் 7 வருபவர்கள், 1,2,5,6 என்ற தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என கூறுகின்றனர்.மேலும், இவ்வாறு திருமணம் செய்பவர்கள், அவர்களது திருமண நாளும் 1, 2, 6 தேதிகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.முக்கியமாக, பிறந்த தேதி கூட்டு 7 வருபவர்கள், 8-ம் தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ள கூடாதாம். 8 தேதியிலும் திருமணம் செய்துக் கொள்ள கூடாதாம்.

ads

Recommended For You

About the Author: Admin