இந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்! - Tamil VBC

இந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்!

அப்போது எல்லாம் மணமகன் வீட்டார், பெண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என கேட்டு வந்தனர். ஆனால், இப்போது மணமகள் வீட்டார்ம பையனுக்கு என்ன வேலை? எவ்வளவு ஊதியம், வீடு, கார் இருக்க? லோன் ஏதேனும் பாக்கி வெச்சிருக்காரா? வெளிநாடு போகும் வாய்ப்பு இருக்கா? என ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கின்றனர்.

நீங்கள் இன்னும் கடன் வைத்திருக்கிறீர்களா?கல்வி கடன், கிரெடிட் கார்டு கடன், பர்சனல் லோன், வாகன கடன் என நீங்கள் இன்னும் செலுத்திக் கொண்டிருக்கும் கடன் நிலுவை எவ்வளவு. இதை எப்படி சமாளிக்கிறீர்கள்? இதனுடன் சேர்த்து இல்லற தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலுமா?

உங்களது கிரெடிட்?நீங்கள் எத்தனை கிரெடிட் கார்டு வைத்துள்ளீர்கள். அதன் இருப்பு எவ்வளவு? ஈ.எம்.ஐ மாதாமாதம் எவ்வளவு செலுத்தி வருகிறீர்கள். கிரெடிட் கார்டு லோன் பெறும் வாடிக்கை வைத்துள்ளீர்களா? இதனை கிரெடிட் மூலம் நீங்கள் சேமித்து அல்லது வாங்கி வைத்தவை என்னென்ன?

உங்கள் செலவு?உங்கள் கனவுகள், திட்டங்கள், வேலை என நீங்கள் செய்யும்செலவு என்னென்ன? உங்களுக்கான மாத தனிப்பட்ட செலவு? உங்கள் செலவு போக, உங்கள் கனவுகளை, திட்டங்களை அடைய செய்யும் செலவு போக ஆரோக்கியமான இல்வாழ்க்கை நடத்த நீங்கள் வைத்திருக்கும் திட்டம்?

வங்கி கணக்கு இணைப்பு?திருமணத்திற்கு பிறகு நம் இருவரது வங்கி கணக்கை ஒன்றாக இணைக்கும் திட்டம் இருக்கிறதா? அல்லது தனித்தனியே அப்படியே வைத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறீர்களா? இணைப்பதால் நன்மைகள் விளையும் என நினைக்கிறீர்களா? யார், யார் என்தேந்தே பில்களை கட்டுவோம்? அவசர செலவுகளை யார் பார்ப்பது? இருவரும் சேமிப்பிற்காக எவ்வளவு பங்களிக்க முடியும்?

பயணம்அன்றாட பயணம் என்று மட்டுமில்லாது, நாம் இருவரும் மேற்கொள்ளும் பயணம். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என பயணம் மேற்கொள்ளும் திட்டங்கள் இருக்கின்றனவா? அப்படியானால் அதற்காக எவ்வளவு தொகை ஒதுக்க முடியும்?


எதிர்கால சேமிப்பு?இவை எல்லாம் போக, எதிர்காலத்தில் குழந்தைகளுக்காக, அவர்களது வளர்ப்பு, கல்வி, மேலாண்மை கருத்தரிப்பு, பிரசவம் என அதற்கான சேமிப்பு திட்டங்கள்?

வீடு?வீடு வாங்குவது ஆயின்? அதற்கு ஹவுசிங் லோன் எப்படி பெறுவது? எவ்வளவு கிடைக்கும்? நமது ஊதியத்தை வைத்து எத்தனை தவணையில் அடைக்க முடியும்? அதற்காக நாம் கூடுதலாக செய்ய வேண்டியவை என்னென்ன என்ற திட்டங்கள் இருக்கிறதா?

ads

Recommended For You

About the Author: Admin