இலங்கை அரசுக்கு கண்டிப்பான கருத்தொன்றை கூறியுள்ள கூட்டமைப்பு – Tamil VBC

இலங்கை அரசுக்கு கண்டிப்பான கருத்தொன்றை கூறியுள்ள கூட்டமைப்பு

இலங்கையில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கு முன்னரும் புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே நடத்தப்படவேண்டும் என்று அரசிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் டிசெம்பரில் நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த விடயத்தை அரசிடம் மீண்டும் ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது கூட்டமைப்பு.

மூன்று மாகாண சபைகளுக்கும் இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் அது புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று நம்பப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல், அதைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்று அடுத்தடுத்து தேர்தல்கள் வந்தால் புதிய அரசமைப்பு முயற்சி நிச்சயமாகப் பின்தள்ளப்பட்டுவிடும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நீண்ட இழுபறியின் பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமைதான் புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இந்தத் தருணத்தில் தேர்தலொன்று வருவது அனைத்தையும் அடியோடு குழப்பிவிடக்கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கருதுகின்றது.

அதனால் புதிய அரசமைப்பொன்றுக்கான மக்களின் கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு முன்னதாக எந்தவொரு தேர்தலையும் அரசு நடத்தக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தலால் புதிய அரசமைப்புக்குப் பாதிப்பு ஏற்படலாம். அதனால் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று நாம் அரசுக்குப் பலமுறை கூறியுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் என எந்தத் தேர்தலாக இருந்தாலும், அந்தத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

எமது நிலைப்பாட்டை அரசுக்கு இப்போதும் எடுத்துரைத்துள்ளோம்” என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *