வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!! - Tamil VBC

வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!!

நாடு முழுவதும் இன்று (30) முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலின் படி, நாளையதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு மேலாக தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதுடன், நாளை மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொள்ளும்.

இதனால் குறித்த பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்கு கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாம்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.இதேவேளை, கடந்த இரவு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உட்பட நாட்டின் பல பாகங்களில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்த்ககது.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *