63 வயதான வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும் யாழ்பாணத்தினை சேர்ந்த யுவதிக்கும் கோலாகலமாக நடந்த திருமணம்.! - Tamil VBC

63 வயதான வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும் யாழ்பாணத்தினை சேர்ந்த யுவதிக்கும் கோலாகலமாக நடந்த திருமணம்.!

ஜேர்மனியில் இருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 63 வயதான நபருக்கும் 35 வயதான பெண்ணுக்கும் யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் பெரும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.மேலும் குறித்த இருவருக்கும் திருமணம் நடந்து விவாகரத்து ஆனவர்கள் என தெரியவந்துள்ளது. இதேவேளை, திருமணமான பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளது குறிப்படத்தக்கது.

குறித்த திருமண நிகழ்வில் யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவரும் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளிவந்தன.மேலும் இந்த திருமணத்தில் மணமகளின் சேடிப் பெண்களாக பெண் குழந்தைகளுடன் குழந்தைகளாக மணமகளின் இரு பெண் பிள்ளைகளும் பூ கொண்டு தாயின் பின்னால் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

மணமகனான மாப்பிளைக்கும் மணமகளின் வயதில் ஒரு ஆண் பிள்ளை இருப்பதாகவும் அந்தப் பிள்ளையும் திருமணம் முடித்து மணமகளின் பிள்ளைகளின் வயதில் குழந்தைகள் உள்ளதாகவும் மாப்பிளையின் உறவுக்காரர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளது.

63 வயதான ஜேர்மன் நபர் 58 வயதில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரியவருகின்றது.இதேவேளை குறித்த திருமணத்தை யாழில் உள்ள ஒரு புறோக்கர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *