குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் இது தான் நடக்குமாம்.!! - Tamil VBC

குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் இது தான் நடக்குமாம்.!!

குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகி விட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.

குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.பெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும் அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரித்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவை விட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும்.

பெரியவர்களுக்கு ஏற்ற சுவையில் சமைத்து விட்டு, அதை சாப்பிடும்படி குழந்தைகளை மிரட்டாதீர். உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டு சமைத்தால், அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது.அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால், அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சர்ட் உல்ப்சன் கூறுகையில், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டு விடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக் கொள்வார்கள் என்றார்.- source: maalaimalar

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *