திருமணமாகி கணவன் இறந்த பின் மீண்டும் திருமணம் செய்யும் பொழுது பெண்கள் படும் வேதனைகள்..!! ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.! – Tamil VBC

திருமணமாகி கணவன் இறந்த பின் மீண்டும் திருமணம் செய்யும் பொழுது பெண்கள் படும் வேதனைகள்..!! ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.!

ஆணிற்கொரு மறுமணம் என்றால் வயதில்லை,எந்தவொரு தடையில்லை இறந்த மனைவியின் நினைவில்லை..அவள் இல்லையென்ற வேதனை இல்லை.

பெண்ணிற்கு மறுமணம் என்றால் மட்டும்,இறந்தவனின் நினைவு வந்துவிடும்.அவன் குடும்பம் தழைக்க ஓர் வாரிசு இல்லையென்ற வருத்தம் வந்துவிடும்.மூன்று மாத வாழ்வில் மூளைச்சாவில் கணவன் போனால் மூலையில் அமரவைத்து,மூக்குசிந்தி செல்லும் கூட்டம் சொல்லுது.வாரிசு இல்லை.இறந்தவன் நினைவின்றி,உடலுக்காக அடுத்தவனை கைப்பிடிக்கிறாளென்று.

பிள்ளையொன்று பிறந்துவிட்டால் பிரிதொரு வாழ்க்கை அமைக்க நினைக்குமோ இக் கூட்டம்? பிள்ளைக்காக வாழ்ந்திடு என்று சொல்லி,தங்கள் மகிழ்வைக் கூட தளர்த்திடாது,நகர்ந்து செல்லும் கூட்டம் சொல்லுது இறந்தவனின் நினைவு அவளிற்கு இல்லையென்று


இறந்தவனை மட்டுமே நினைத்திருந்தால்,இவள் வாழ்க்கை மீண்டிடுமோ? இல்லை..குழந்தை
ஒன்றுதான் பிறந்திட்டால் குடும்பமாக ஆகிடுமோ? கண்ணீரில் கரைந்தபடி காலமெல்லாம் இவள் வாழ,கலகலவென சிரித்தபடி செல்லும் கூட்டம்..அடுத்த சோலி பார்க்க,மூலையில் அமர்ந்தவள்
மீண்டுமொரு மாலை ஏந்தினால் மட்டும்,மூலைக்கு மூலை நின்று பேசுது கதை.

இல்லாமல் போனவனுக்காக,இவள் இடிவிழுந்த மரமாக பட்டுப் போக வேண்டுமோ?துளிர்த்திடல் ஆகாதோ?? இறந்தவன் குலம் வாரிசற்று போனதற்க்காய்.இவள் குலம் தழைக்க கூடாதோ? வாரிசுக்காக பெண்களின் வாழ்க்கையை பாழாக்காது. வாழவையுங்கள்.மீண்டும் வாழ்வளித்து.வாழச் சென்றால் வாழ்த்திடுங்கள்
வழி மறைக்காது.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published.