தொண்டமனாறு ஆலய கடலில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த கதி..!! ஆரம்பமானது விசாரனை.!! – Tamil VBC

தொண்டமனாறு ஆலய கடலில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த கதி..!! ஆரம்பமானது விசாரனை.!!

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் நேற்று காலை (11.01.2023) மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published.