பொங்கல் எந்த திசையில் பொங்கினால் எந்த மாதிரி பலன் கிடைக்கும்..!! வாங்க பார்க்கலாம்.! – Tamil VBC

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் எந்த மாதிரி பலன் கிடைக்கும்..!! வாங்க பார்க்கலாம்.!

பொங்கல் பண்டிகை வரப்போகிறது. அறுவடை பண்டிகை என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது விவசாயத்திற்கு

நிலத்தை வழங்கிய இந்திரனுக்கும், சூரியனுக்கும், விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகை அன்று விவசாயம் செய்து அறுவடை செய்த புதிய பச்சரியைக் கொண்டு பொங்கல் வைப்போம்.

அதுவும் புதிய பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி, பானையைச் சுற்றி விபூதியை பூசி, மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரித்து, அதில் பாலும், நீரும் ஊற்றி நிரப்பி, அடுப்பில் வைத்து, பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என்று சூரியனை நோக்கி வணங்குவது தான் நமது பண்பாடு.

அப்படி பொங்கல் பொங்கும் போது, அந்த பால் எந்த திசையில் பொங்கி வழிகிறதோ, அந்த திசையை வைத்து அந்த ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்று நமது முன்னோர்கள் கணித்து கூறியுள்ளனர். இப்போது எந்த திசையில் பொங்கல் பொங்கினால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

கிழக்குபொங்கல் கிழக்கு திசையில் பொங்குவது நல்லது. நீங்கள் வைக்கும் பொங்கல் இந்த திசையில் பொங்கினால், உங்கள் வீட்டில் வீடு அல்லது நிலம் வாங்கும் பேச்சு ஏதேனும் இருந்தால், அது நல்லபடி நடக்கும். மேலும் எதையாவது வாங்க திட்டமிட்டிருந்தால், அதை விரைவில் வாங்குவீர்கள். மேலும் ஆடை, ஆபரணங்களும் சேரும் வாய்ப்புள்ளது.

மேற்குபொங்கல் மேற்கு திசை வழிந்தால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீட்டில் திருமண வயதில் மகள்-மகன் இருந்தால், அவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப செலவுகள் அதிகமாக இருக்கும்.


வடக்குவடக்கு திசையில் பொங்கல் பொங்கினால், பண வரவு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடும் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அது சமூகமாக முடியும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. கொடுத்த கடன் சிக்கலின்றி கைக்கு கிடைக்கும்.

தெற்குபொங்கல் தெற்கு திசையில் பொங்கினால், அந்த ஆண்டு முழுவதும் மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். எப்போதும் மிகுந்த சோர்வுடன் இருப்பீர்கள். அந்த வீட்டில் உள்ள திருமணமாகாதவர்களுக்கு சற்று தாமதமாகவே திருமணம் நடக்கும். எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published.