சில உணவுகள் கர்ப்பிணிப் பெண்களின் கருவை கலைக்கக் கூடிய தன்மை கொண்டவை என்பதால் அவற்றை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.கர்ப்பிணிகள் பப்பாளி மற்றும் அன்னாசி பழம் சாப்பிட்டால்,அவர்களின் கரு கலைந்துவிடும் என்பதை பல சினிமாக்களில் பார்த்திருக்கலாம்.
ஆனால் அவை தவிர வேறு சில உணவுப் பொருட்களும் கருவை கலைக்கும் தன்மை கொண்டவை.இது குறித்த விழிப்புணர்வு தற்கால இளைஞர்,இளைஞிகளிடம் குறைவாக இருப்பதால்,கர்ப்பிணிகள் சிலர் ஆசைப்பட்டு சில உணவுகளை உண்டு தங்கள் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்திக்
கொள்கின்றனர்.பப்பாளி,அன்னாசி தவிர எலுமிச்சை,ஆரஞ்சு,எள்,உலர் அத்திப்பழம்,கிரீன் டீ,பாலாடை,வேப்பிலை ஆகிய உணவுப் பொருட்களும் கருவுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.எனவே
கருவுற்றிருக்கும் காலத்தில் இது போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.இலகுவான,விரைவாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை கருவுற்றிருக்கும் காலங்களில் சாப்பிடுவது தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.-Source: tamil.samayam