சனாதன தர்மத்தை உருவாக்கும் 18 புராணங்களில் மிகவும் முக்கியமானது தான் கருட புராணம். இந்த புராணம் வாழ்க்கையைப் பற்றிய மாற்று கண்ணோட்டத்தை வளர்க்க பயன்படும் சில புதுமையான கருத்துக்களை தருகின்றன. மத சாஸ்திரங்களின் படி, ஒருவர் இறந்த பிறகு கருட புராணம் படிக்கப்படுகிறது. அதாவது ஒருவர் இறந்த பிறகு அவரது ஆன்மா அந்த வீட்டில் 13 நாட்கள் தங்கியிருப்பதாகவும், அந்த ஆன்மாவிற்கு முக்தி அளிக்க கருட புராணம் படிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த கருட புராணத்தை இறப்பதற்கு முன்பும் படிக்கலாம்.
கருட புராணம் கருடனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே நடந்த விவாதத்தை விவரிக்கிறது. கருட புராணம் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது. கருட புராணத்தில் மனிதனின் சில பழக்கவழக்கங்கள் அவனை வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது. அந்த பழக்கங்களை கைவிடாவிட்டால், அந்நபர் வறுமையை நோக்கி கொண்டு செல்லும். ஏன் அரசனாக இருப்பவனைனக் கூட ஆண்டியாக மாற்றும். இப்போது கருட புராணத்தில் வறுமையைத் தவிர்க்க கைவிட வேண்டிய பழக்கங்களாக கூறப்பட்டுள்ளவை எவையென்பதைக் காண்போம். உங்களிடம் அப்பழக்கம் இருந்தால் உடனே கைவிடுங்கள்.
ஈகோ கருட புராணத்தின் படி, வாழ்க்கையில் எப்போதும் எதிலும் கர்வம் கொள்ளக்கூடாது. ஏனெனில் ஈகோ ஒருவரின் புத்தியை கெடுக்கும் மற்றும் அவர் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவார். ஈகோவுடன் நடந்து கொள்வோருடன் யாரும் பழக விரும்பமாட்டார்கள். இன்றைய காலத்தில் மக்கள் செல்வம், நிலம், வீடு, கார் என பல விஷயங்களால் பெருமை கொள்கிறார்கள்.
அழுக்கான சமையலறை கருட புராணத்தின் படி, இரவு தூங்கும் முன் சமையலறையில் அழுக்கு பாத்திரங்கள் இருந்தால், அவற்றை சுத்தம் செய்யாமல் தூங்கக்கூடாது. இப்படி செய்வதனால் சனியின் மோசமான தாக்கத்திற்கு ஆளாகக்கூடும். மேலும் லட்சுமி தேவியும் சமையலறை அசிங்கமாக உள்ளது என்று வீட்டிற்கு வர மறுப்பார். எனவே சமையலறையை சுத்தம் செய்யாமல் தூங்க செல்லாதீர்கள்.
அழுக்கான ஆடைகள் கருட புராணத்தின் படி, அழுக்கான ஆடைகளை அணிவது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகாக்கும். ஏனெனில் லட்சுமி தேவி தூய்மையை விரும்புபவர் மற்றும் தூய்மையான இடத்தில் தான் அவர் வாழ்வார். எனவே உங்கள் வீட்டில் மற்றும் உங்களுடன் லட்சுமி தேவி இருக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்கும்.

மற்றவர்களின் செல்வத்தைப் பறிப்பது இன்று செல்வத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. பலர் மற்றவர்களின் செல்வம் அல்லது சொத்துக்களை பறிக்க நினைக்கிறார்கள். இப்படி செய்தால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதன் விளைவாக இத்தகையவர்கள் எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியை அனுபவிக்கமாட்டார்கள். அதுவே கடினமாக உழைத்து சம்பாதித்தால், லட்சுமி தேவி அவருக்கு அருள் புரிவார்.

பிறருக்கு தீங்கு நினைப்பவர்கள் கருட புராணத்தின் படி, மறைமுகமாக பிறருக்கு தீங்கு செய்ய நினைப்பவர்களை லட்சுமி தேவி ஆசீர்வதிக்கமாட்டார். இத்தகைய எண்ணம் கொண்டவர்களிடம் தொடர்ந்து பண பற்றாக்குறை இருக்கும். மேலும் காரணமில்லாமல் கத்துவதும், ஆத்திரமடைவதும் வறுமைக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் உள்ள சூழலில் லட்சுமி தேவி தங்கமாட்டார்.