சிறுவர்கள் வயதில் மூத்தவர்களிட்கு முக்கிய அறிவிப்பு! – Tamil VBC

சிறுவர்கள் வயதில் மூத்தவர்களிட்கு முக்கிய அறிவிப்பு!

காற்றில் கலந்துள்ள காற்றுமாசுபாடு காரணமாக வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர்து, சுபோகரன் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின் சில பகுதிகளில் வழியில் தர சுட்டெண் சற்று உயர்வாக காணப்படுகின்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இது சாதாரணமாக வளி மண்டலத்தில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றத்தின் மூலம் அதாவது காற்றின் வேகம் காற்றின் திசை மற்றும் தாழமுக்க மாற்றத்தின் காரணமாக வளியில் காணப்படும் சில மாசுக்கள் இலங்கையிலே செறிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

அந்த வகையிலேயே கடந்த சில நாட்களாக, வளித்தட சுட்டெண் இலங்கையில் காணப்படுகின்ற நிறுவனங்களின் அறிக்கையின்படி சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இவ்வாறு காணப்படுவதனால், மக்கள் பொதுவாக அவதானமாக நடமாடுவது நல்லது.

மழையுடனான காலநிலை
எனவே அநாவசியமாக வெளியில் நடமாடாது, குறைத்துக் கொள்வது மிக நல்லது. அதே நேரம் நேற்று தொடக்கம் மழையுடனான காலநிலை காணப்படுவதனால், இந்த வளித்தட சுட்டெண் ஆனது கிடைக்கப்பெற்ற அறிகையின் படி குறைந்து சென்று சாதகமான நிலைக்கு செல்வதை காணக்கூடியதாக உள்ளது.


வேகமாக குறைவடைந்து சாதாரண ஒரு மட்டத்தை அடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதோடு நோயாளிகள், வயதில் மூத்தவர்கள், சிறுவர்கள் அவதானமாக நடமாடி, அநாவசியமாக வெளியில் செல்வதை தவித்துக் கொள்வது நல்லது.

இது அநேகமாக இன்னும் ஒரிரு தினங்களில் ஒரு சாதாரண நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் மிகவும் சாத்தியமாக காணப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.