ஜோதிட சாஸ்திரத்தில் ஆடம்பரம், அழகு, செல்வம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அவர் செல்வ செழிப்போடு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதோடு, காதல் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும். மாதந்தோறும் சுக்கிர பெயர்ச்சி நிகழ்வதுண்டு.
இந்த சுக்கிர பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் செல்வ நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சுக்கிர பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் 2022 டிசம்பர் 05 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இதனால் தனுசு ராசியில் சுக்கிரன் புதனுடன் ஒரே ராசியில் சில காலம் பயணிப்பார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரனும், புதனும் ஒரே ராசியில் இணையும் போது, லட்சுமி நாராயண யோகம் உருவாகும். இந்த யோகம் நற்பலன்களைத் தரக்கூடியது. எனவே டிசம்பர் 5 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் அமோகமான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டத்தின் அதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியான நல்ல பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். கடந்த கால கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். நண்பர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மிதுனம்மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. எனவே மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறனால் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். நிதி விஷயங்களில் ஓரளவு வெற்றி கிடைக்கும். சுப காரிய செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். ஹோட்டல், பயணம், நிர்வாகம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். வருமானம் உயரும். குழந்தைகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசுதனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சுக்கிரனின் பரிபூர்ண அருளால் வருமானம் அதிகரிக்கும். வேலையில் உங்கள் செல்வாக்கு உயரும். முதலீடு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாக துறையில் இருப்பவர்கள் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகள் மேம்படும்.

மீனம்மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதன் காரணமாக தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். வேலையில் உங்களின் செயல்திறன் மேம்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். நிதி விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும். வாகனம் வாங்க நினைத்தால், உங்களின் ஆசை நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)SOurce:boldsky