வெளியில் செல்லும்போது காக்கை நம்மீது எச்சமிடுவதால் தோஷம் ஏதேனும் உண்டாகுமா? – Tamil VBC

வெளியில் செல்லும்போது காக்கை நம்மீது எச்சமிடுவதால் தோஷம் ஏதேனும் உண்டாகுமா?

தங்கள் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக மரக்கிளைகளில் காக்கை மட்டும் அல்ல பறவைகள் அனைத்துமே வந்து அமர்ந்து போகின்றன. அந்த நேரத்தில் தங்கள் கழிவுகளை வெளியேற்றுவது இயற்கை தான். அதேசமயம் நாம் மரங்களுக்கு கீழே அந்த நேரத்தில் நிழலுக்காக அமர மரத்தை சுற்றிலும் பார்க்கும்போது மேலே பார்ப்பது கிடையாது.

நாம்தான் கவனமாக இருக்க வேண்டுமே தவிர பறவைகளை எப்போதும் குறை சொல்லக் கூடாது. காக்கைகள் அல்லது மற்ற பறவை இனங்கள் எச்சமிட்டு தலையில் விழுந்துவிட்டால் உடனே அருகில் உள்ள நீர் நிலைக்குச் சென்று தலைமுழுகி விட்டு கோவிலுக்குச் சென்று ஏதாவது ஒரு தெய்வ சன்னதியில் தீபம் ஏற்றி விட வேண்டும். அதோடு விபூதி மற்றும் துளசி நீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.

தேள் கொட்டுவது, காக்கை எச்சம் இடுவது, எதிர்பாராமல் கழிவுநீர் நம் உடல் மீது கொட்டப்படுவது போன்று ஏதேனும் நிகழ்ந்தால் அதை யாரிடமும் கதை போன்று விவரித்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.

அந்த நாள் மாலையில் அனுமன் துதிகளைச் சொல்லி செந்தூரம் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை சில ஜோதிடர்கள் பெரிதுபடுத்தி சனி திசை ஆரம்பம் ஆகிறது அதன் பொருட்டு ஏற்பட்டுள்ளது, கண்டமும் வண்டிகளில் சென்றாலும் வெளி இடத்திற்குச் சென்று வருவதிலும் கவனம் தேவை என்றெல்லாம் கதை கூறுவார்கள். ஆனால் இது சாதாரண விஷயம் தான் இதை பெரிது படுத்த வேண்டாம்.

திடீரென காகம் நம் மீது எச்சம் இடுவது, தலையில் தட்டுவது, கொத்தி விட்டு போவது போன்ற விஷயங்கள் நமக்கு நன்மை செய்யவே. நம் முன்னோர்களின் ரூபமாகதான் காகம் இருக்கிறது. எனவே காக்கைகளின் மூலம் நமக்கு எந்த கெடுதலும் ஏற்படாது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.