மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னாள் மூளையில் வரும் நினைவுகள்! ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியப்படுத்திய அந்த 30 நிமிடம்! – Tamil VBC

மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னாள் மூளையில் வரும் நினைவுகள்! ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியப்படுத்திய அந்த 30 நிமிடம்!

மனித வாழ்க்கையில் பி றப்பு முதல் இ றப்பு வரை அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நினைவுகள் வந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த அனைத்து நினைவுகளும் நமது மூளையின் எங்காவது ஒரு ஓரத்தில் பதிவு செய்யப்படும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. அதாவது நாம் மறக்க முடியாத சில முக்கிய நினைவுகள் நமது பிரைமரி மெமரியில் இருக்கும்.

அன்றாட வேலைகள் நமது சப் கான்ஷியஸ் மெமரியில் சேமிக்கப்படும். அதாவது நாம் வேறு வேலைகளில் கவனம் செலுத்தினாலும் ஒரு சில வேலைகள் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும். இப்படி நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களும் நமது நினைவுகளாக மூளையின் எங்கேனும் ஒரு இடத்தில் சேமிக்கப்படும்.

அந்த வரிசையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு விஷயம் அறிவியலாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒரு மனிதன் இ றப்பதற்கு முன்னாள் என்ன எல்லாம் நடக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 87 வயது முதியவரின் ம ரணத்துக்கு முந்தய கடைசி 30 நிமிடங்களில் அவரது மூளையின் செயல்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாழும் வரையில் மெதுவாக இயங்கிய அவரது மூளை அந்த அரை மணிநேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாம்.

மேலும் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான மற்றும் இனிமையான தருணங்களை அவர் மூளை நினைவு கூர்ந்ததாம். அதாவது அவரது வாழ்க்கையில் இளமை காலம் முதல் தற்போது வரையில் இருந்த நினைவுகள். மேலும் அது ஒரு கனவு போல அவரை உணரச்செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது மூளையில் அப்போது காமா அலைகள் உருவானதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த மாதிரியான நிகழ்வுகள் இது வரையில் பதிவு செய்யப்பட்டுள்ளவற்றில் வித்தியாசமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.