இன்று வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் மூன்றாம் பிறை தரிசனம்! வெறும் கையோடு வரங்களை கேட்டாலும் உடனே கிடைக்கும் – Tamil VBC

இன்று வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் மூன்றாம் பிறை தரிசனம்! வெறும் கையோடு வரங்களை கேட்டாலும் உடனே கிடைக்கும்

சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் பிறை நிலாவை, நாளை நாம் எல்லோருமே நேரடியாக நம் கண்களால் வானத்தில் பார்க்கலாம். இறைவன் தன் தலை மேலே வைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலவை, நேரடியாக மனிதர்கள் தரிசனம் செய்வது எத்தனை புண்ணியம். வெறும் பணம் காசு, செல்வ செழிப்புக்காக மட்டும் இந்த பிறை நிலா தரிசனம் கிடையாது. செல்வ வளங்களோடு சேர்த்து மனம் மகிழ்ச்சியை பெறுவதற்கும், இந்த பிறை தரிசனம் கைமேல் பலனை கொடுக்கும்.

சில பேருக்கு வாழ்க்கையில் தடுமாற்றம் இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக தோன்றும். தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கும். வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்வதற்கு தைரியம் இல்லாத கோழையாக இருப்பார்கள். எந்த சமயத்தில் எந்த முடிவு எடுப்பது என்ற குழப்பம் சில பேருக்கு அடிக்கடி வரும். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தொடர்ந்து பிறை நிலவை தரிசனம் செய்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்கும்.

இதோடு மட்டுமல்லாமல் கிரகங்களில் சந்திரனால் உண்டாக்கப்பட்ட தோஷங்களில் இருந்து விலகுவதற்கும் இந்த பிறை நிலவு தரிசனம் நமக்கு பலன்களை கொடுக்கும். கலை இழந்த முகம், முழு நிலவு போல பிரகாசமாகும். இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்ட மூன்றாம் பிறை தரிசனம் நாளை வெள்ளிக்கிழமை அன்று வரவேற்கின்றது. குறிப்பாக இந்த கார்த்திகை மாதத்தில் வரவிருக்கும் இந்த பிறை நிலா தரிசனத்தை மிக மிக சுலபமான முறையில் எந்த பொருட்களுமே கையில் வைத்துக்கொள்ளாமல் கையேந்தி வரங்களை கேட்டாலும் நம்மால் இந்த பிரபஞ்சத்திடம் இருந்து நிறைய வரங்களை பெற்று விட முடியும். அந்த வழிபாட்டினை எப்போது மேற்கொள்வது. எப்படி மேற்கொள்வது என்ற விரிவான தகவலை தெரிந்து கொள்வோமா.

பிறை நிலவை அவ்வளவு எளிதில் நம்மால் வானத்தில் பார்த்து விட முடியாது. மேற்கு பக்கத்திலிருந்து பிறை நிலா வரும். அதுவும் குறிப்பாக இருட்டிய பிறகு மாலை 6:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் பிறை நிலா தரிசனம் தெரிந்துவிடும். அதுவும் குறைந்தது 5 நிமிடம், அதிகபட்சம் 10 நிமிடங்கள் தான் வானத்தில் பிறை நிலா தென்படும். அந்த சமயத்தில், பார்க்கக்கூடிய தருணம் உள்ளவர்கள் பிறை நிலாவை பார்த்து மண்டியிட்டு அதாவது முட்டிப்போட்டு இரண்டு கைகளையும் ஏந்தி சந்திர பகவானிடம், ஈசனிடம் உங்களுக்கு வேண்டிய வரங்களை கேளுங்கள். எந்த வரமாக இருந்தாலும் சரிதான் ஆனால் அது நியாயமான கோரிக்கைகளாக இருக்கட்டும். (மேகமூட்டம் இருக்கிறது என்றால் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டாலும் பிறை நிலவை பார்க்க முடியாது.)

கண்களை மூடி எல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டாம். பிறை நிலாவே பார்த்தபடி ஈசனை மனதில் நினைத்துக் கொண்டு இந்த பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். மொத்தமாக ஐந்து நிமிடம் தானே இதை நம்மால் செய்ய முடியாதா. பிறைநிலா தெரியவில்லை என்றாலும் நாளை மாலை 6:30 முப்பது மணிக்கு மேல் 7:00 மணிக்குள் வெட்ட வெளியாக இருக்கக்கூடிய இடத்தில் போய் மண்டியிட்டு அமர்ந்து மேற்கு பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் தெரிவிக்கலாம். வெறும் வானத்தைப் பார்த்து வரங்களை கேளுங்கள். இப்படி கையேந்தியபடி வரங்களை கேட்டு விட்டு சிறிது நேரம் வெட்டவெளியில் அமர முடிந்தால் அமர்ந்து, மனதை ஒருநிலைப்படுத்தி இந்த பிரபஞ்சத்திடம் மனம் விட்டு பேசலாம். தவறு கிடையாது.

இந்தப் பிரபஞ்சத்தை உங்களுடைய நண்பனாக நினைத்து உங்களுடைய கஷ்ட நஷ்டங்களை இந்த மூன்றாம் பிறை நாளில், பிறை நிலவு தரிசனத்தின் போது பகிர்ந்து கொண்டால், நீங்கள் சொல்லுவதெல்லாம் நேரடியாக அந்த கடவுளுக்கே கேட்கும் என்பது நம்பிக்கை. இந்த விஷயம் எல்லாம் சிலருக்கு மடத்தனமாக இருக்கலாம். ஆனால் தனக்கு மேலே ஒரு இறைசக்தி உள்ளது என்று உணர்பவர்களுக்கு, மேலே சொன்ன விஷயங்கள் நன்றாக புரியும். உங்களுக்கும் இறை நம்பிக்கை இருந்தால் நாளை மேல் சொன்ன வழிபாட்டை செய்து பாருங்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.