முகம் மொஸைக்கல் மாதிரி பளபளக்க, காலையில் இப்படி செய்தால் போதுமாம்! – Tamil VBC

முகம் மொஸைக்கல் மாதிரி பளபளக்க, காலையில் இப்படி செய்தால் போதுமாம்!

நான் கொஞ்சம் கலர் கம்மி, கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பேன்னு சொல்வாங்க. அழகு ஒரு பக்கம் இருந்தாலும், கொஞ்சம் நாளாவே முகம் வறண்டு போன மாதிரி தெரிகிறது. முகம் முன்பு இருந்தது போல பிரகாசமாக இல்லை. போன மாதம் பொண்ணு பார்க்க வந்தவங்க எல்லோரும், பொண்ணு கொஞ்சம் கலர் கம்மி, மத்த படி எங்க பையனுக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. என்னுடைய முகத்தை வைத்தே எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்படுகிறேன். சிலர் மட்டம் தட்டி பேசுவாங்க.

இவளுடைய காலருக்கு, குண்டா, கருப்பான பையன் பார்த்தா தான் சரியா இருக்கும் என கிண்டல் பண்ணுவாங்க. ஆனால் இப்போ என்னை பார்க்க வந்த மாப்பிள்ளை லட்சணமா இருப்பாரு. எல்லோரும் சொன்னாங்க. அடுத்து மாப்பிள்ளை உன்னை வந்து பார்ப்பதற்குள் கொஞ்சமாச்சும் எதையாவது பூசி கலர் ஆகுன்னு சொன்னாங்க. ஒரு சில வழிமுறைகளை தான் கையாண்டேன். இரண்டே வாரங்களில் முகம் பளிச்சென்று மாறிவிட்டது. கருப்பழகியாக மாறிவிட்டதாக என்னவர் பாராட்டினார்.

அதற்காக நான் செய்த சிலவற்றை சொல்றேன். காலையில் வெறும் வயிற்றில் ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தேன். ஜூஸ் குடித்து ஒரு அரை மணி நேரம் கழித்து வேறு ஏதாவது சாப்பிடலாம். இந்த அரை மணி நேரத்தில் வேறு எதையும் சாப்பிடக்கூடாது என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தொடர்ச்சியாக எடுத்து வந்தால், முகம் பொலிவோடு இருக்கும். தினமும் குடித்து வந்தால் ஒரு வாரத்திலே மாற்றம் தெரியும். எனக்கு நல்ல பலனை கொடுத்தது.

இது தவிர பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, இரு இருபது நிமிடம் கழித்துக ழுவினால் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். வாரத்திற்கு இரண்டு முறை பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் இந்த நான்கையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். இந்த மூன்றும் நான் மேற்கொண்ட வழிமுறைகள். செய்துபார்த்து ரிசல்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. வேறு ஏதாவது குறிப்பு உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லலாம்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.