இதை கவனிக்காம இருந்துட்டோமே..சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இந்த செயல்களை மட்டும் செய்யாதீங்க! – Tamil VBC

இதை கவனிக்காம இருந்துட்டோமே..சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இந்த செயல்களை மட்டும் செய்யாதீங்க!

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டில் விளக்கேற்றிய பின்னர் சில காரியங்களை செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகள் நமக்கு பணப்பிரச்சினையை ஏற்படுத்தி விடும். பொருளாதார சிக்கலை ஏற்படுத்தக்கூடிய செயல்கள் என்னென்ன? சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு என்னென்ன காரியங்கள் செய்யக்கூடாது என்றும் பார்க்கலாம்.

வீட்டில் விளக்கேற்றும் நேரம் மாலை நேரம். சூரியன் மறைந்த பின்னர் வீட்டில் வெளிச்சத்திற்காக லைட் போட்ட நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றுவார்கள். நம் வீட்டிற்கு வரும் மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக விளக்கேற்றி வைப்பார்கள்.

மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வரும் போது நாம் தூய்மையாக இருக்க வேண்டும். விளக்கேற்றிய பிறகு தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது…தலை சீவக்கூடாது..குளிக்கக்கூடாது வீடு துடைக்கக் கூடாது என்று சில செயல்களை சொல்லி வைத்திருக்கின்றனர். இன்னும் என்னென்ன செயல்களை மறந்தும் செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்.

மாலையில் தூங்க வேண்டாம்

பொதுவாக பகல் நேரங்களில் தூங்கக் கூடாது என்று சொல்வார்கள். வயதானவர்கள்.. நோயாளிகளுக்கு அது விதி விலக்கு. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உறங்கக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கினால் நோய் பாதிப்பு ஏற்படும். மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்குள் வரும் நேரத்தில் நாம் கதவை பூட்டிக்கொண்டு உறங்கினால் லட்சுமி தேவி வருவது தடைபட்டு விடும். செல்வ வரவும் நின்று போகும்.

மகாலட்சுமியின் கோபம்

மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி. அவரை வரவேற்கும் விதமாக வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வீட்டில் விளக்கேற்றிய பிறகு வீடு கூட்டி பெருக்கவோ, துடைப்பதோ கூடாது. மாலை நேரத்தில் வீடு துடைத்தால் நேர்மறை சக்தி வெளியேறி எதிர்மறை சக்தி குடியேறி விடும்.

வாசல்படியில் அமராதீர்கள்

பொதுவாக தலைவாசல்படியில் உட்காருவது நல்ல விசயமல்ல. வீட்டில் இருக்கும் இல்லத்தரசியோ, ஆண்களோ மாலை நேரத்தில் வாசற்படியில் அமர்ந்தால் அது செல்வ வரவுக்கு தடையை ஏற்படுத்தி விடுமாம். எனவே மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாகி விடாமல் இருங்கள்.

துளசியை பறிக்காதீர்கள்

துளசி செடி புனிதமானது. துளசி செடி இருக்கும் வீட்டில் செல்வம் பெருகக் கூடும். தூய்மையானவர்கள்..நல்ல எண்ணம் கொண்டவர்கள் வீட்டில்தான் துளசி செடி அதிகம் வளரும். சாஸ்திரங்களின் படி ஏகாதசி நாளில் துளசியை பறிக்கக்கூடாது. அதே போல சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு துளசி செடியை பறிக்காதீர்கள். இதனால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

இதை தானமாக தர வேண்டாம்

பால், தயிர், உப்பு எல்லாமே மகாலட்சுமியின் அம்சம். இந்த பொருட்களை நாம் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில்

இரவல் தரக்கூடாது. குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டில் விளக்கேற்றிய பிறகு பால், தயிர், உப்பு கொடுக்கக்கூடாது. இதன் மூலம் பொருளாதார சிக்கல் ஏற்படும். செல்வந்தராக இருந்த வீட்டில் கூட வறுமை ஏற்படக்கூடும். மகாலட்சுமியின் அருளைப் பெற நீங்கள் வீட்டில் விளக்கேற்றிய பிறகு பூஜை செய்து வணங்குங்கள். செல்வம் நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்கும்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.