சம்பள பணத்தில் முதலில் நீங்கள் வாங்கும் இந்த ஒரு பொருள்.. உங்களை நிச்சயம் கோடீஸ்வரர் ஆக்கும் – Tamil VBC

சம்பள பணத்தில் முதலில் நீங்கள் வாங்கும் இந்த ஒரு பொருள்.. உங்களை நிச்சயம் கோடீஸ்வரர் ஆக்கும்

கையிலே வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியலை என்று பலரும் ஆதங்கப்படுவார்கள். அந்த அளவிற்கு செலவு வரிசை கட்டி நிற்கும். சம்பாதிக்கும் பணம் முழுவதுமே இப்படி செலவாகி விடுகிறதே.. சேர்த்து வைக்க முடியலையே.. நாமும் பணக்காரர் ஆவது எப்படி? என்று பலரும் யோசிப்பார்கள். அம்பானி..அதானி அளவிற்கு பணக்காரர் ஆக முடியாவிட்டாலும் ஊர் மெச்சும் அளவிற்கு பணக்காரர்களாக வாழ சில வழிமுறைகள் உள்ளன. அது என்ன வென்று பார்க்கலாம்.

சம்பாதிக்கும் சிறு தொகையாக இருந்தாலும் அது நமக்கு வருமானம்தான். சம்பள பணத்தை எல்லோருமே மாதம் பிறந்த உடன் 1ஆம் தேதியே வாங்கி விட மாட்டார்கள். 10ஆம் தேதி வரை பணம் அக்ககவுண்டில் வரவாகும். ஏடிஎம்மிற்கு சென்று பணத்தை எடுத்த உடன் முதலில் சிலர் எது எதற்கு பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று ஒதுக்குவார்கள்.

பலசரக்கு, பால், பூக்கள், மருத்துவ செலவு என எத்தனையோ செலவுகளுக்கு பணத்தை ஒதுக்கி வைப்பார்கள். அப்படி ஒதுக்கும் பணத்தில் இருந்து முதலில் ஒரு பொருளை மறக்காமல் வாங்கி விடுங்கள். அந்த பொருள் உங்கள் வாழ்க்கையின் பொருளாதார நிலையை உயர்த்தும். சம்பள பணம் வாங்கிய உடன் முதலில் என்ன செலவு செய்யலாம் என்ன செலவு செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

சம்பள பணம்

மாதம் தோறும் சம்பளம் வாங்கிய பின்பு ஒரு ரூபாயை மட்டும் இப்படி செலவு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் அடுத்த மாதம் சம்பளம் வாங்கும் போது ஏதாவது ஒரு பெரிய நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சம்பளம் வாங்கியவுடன் செய்ய வேண்டிய செலவு என்ன, செய்யக்கூடாத செலவு என்ன, என்பதை பற்றிய சில சாஸ்திர ரீதியான நல்ல விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மளிகை சாமான்
நம்முடைய வீட்டிற்குத் தேவையான மளிகைச் சாமான்கள் வாங்க பலசரக்கு லிஸ்ட் எழுதும் போதே முதலில் கல் உப்பு, மஞ்சள் என்று போட்டு ஆரம்பிக்க வேண்டும். அதன் பிறகு வரிசையாக பொருட்களை எழுதுவோம். மளிகை சாமான்கள் லிஸ்ட்டில் ஊறுகாய் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

உப்பும் ஊறுகாயும்

உப்பு மகாலட்சுமியின் அம்சம்.. ஊறுகாய் குபேரருக்கு பிடித்தமானது. எனவேதான் சம்பளம் வாங்கிய உடன் முதலில் கல் உப்பு வாங்குவதற்கு செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். வீடு பால் காய்ச்சும் போது உறவினர்கள் பலரும் புது வீட்டிற்கு கல் உப்பு கொண்டு செல்வதும் அதற்குத்தான். அதே போல நம்முடைய முதல் செலவு ஊறுகாய் வாங்குவதாக இருக்கட்டும். பெரிய பாட்டில் ஊறுகாய் வாங்க முடியாவிட்டாலும் சின்ன பாட்டிலாவது ஊறுகாய் வாங்க வேண்டும்.

மருத்துவ செலவு
ஒரு சிலர் சம்பள பணம் வாங்கிய உடனேயே மருத்துவ மனைக்கு செல்வார்கள். மாத்திரை வாங்க செலவு செய்வார்கள். அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். கல் உப்பு ஒரு பாக்கெட் அல்லது ஊறுகாய் ஒரு பாட்டில் வாங்கி வீட்டில் வைத்து விட்டு பின்னர் அடுத்த செலவுகளை செய்வது நல்லது.

சுப செலவுகள்

நம்முடைய செலவுகள் முதலில் சுப செலவாக இருக்கட்டும். பூக்கள் வாங்கலாம். கோவிலுக்கு அன்னதானம் செய்ய பணம் கொடுக்கலாம். பால்காரருக்கு பணம் கொடுக்கலாம். கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது சுப செலவுதான்.

தானம் செய்யுங்கள்
நம்மை விட வசதி குறைவான நிலையில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு பொருள் வாங்கித்தர வேண்டும். அவர்களின் வாழ்த்து நம்மை வாழ வைக்கும். உங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருள் வாங்கிக் கொடுங்கள் நீங்கள் மேலும் மேலும் அதிக பணம் சம்பாதிக்கவும் நிறைய தானம் செய்யவும் தேவையான பொருள் உங்களைத் தேடி வரும். குபேர யோகம் கிடைப்பதோடு அன்னை மகாலட்சுமியின் அருள் பார்வையும் உங்களுக்கு கிடைக்கும்.

நம்பிக்கையோடு செய்யுங்கள்

பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. நாம் பணக்காரர் ஆக இருப்பது போல நம்ப வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கையும் எண்ணமுமே நம்மை நல்ல நிலைமைக்கு உயர்த்தும். லாட்டரியில் ஜாக்பாட் அடித்து திடீர் கோடீஸ்வரர் ஆனவர்கள் இருக்கிறார்கள். மறைமுக வருமானம் மூலம் பணக்காரர்கள் ஆனவர்கள் உள்ளனர். முன்னோர் சொத்துக்கள் மூலமும் புதையல் போல திடீரென பணம் கிடைத்தும் பணக்காரர்கள் ஆனவர்கள் உள்ளனர். எனவே நமக்கும் நல்ல முறையில் பணம் தேடி வரும் நாம் கோடீஸ்வரர் ஆவோம் என்ற நம்பிக்கையும் வேண்டும். நாமும் பணக்காரர் ஆவோம் என்று முதலில் நம்புங்கள் பணம் தானே தேடி வரும்

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.