இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் பார்க்க நேர்ந்தால் திடீர் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம் தெரியுமா? அடிக்கடி இவை உங்கள் கண்களுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? – Tamil VBC

இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் பார்க்க நேர்ந்தால் திடீர் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம் தெரியுமா? அடிக்கடி இவை உங்கள் கண்களுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்?

சில அறிகுறிகள் நமக்கு துரதிருஷ்டத்தையும், சில அறிகுறிகள் நமக்கு அதிர்ஷ்டத்தையும் தரும் வண்ணம் அமைய பெற்றிருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த விஷயங்களை நாம் பார்க்க நேர்ந்தால், நமக்கு அதிர்ஷ்டம் வரும்? அந்த விஷயத்தை பார்க்கும் பொழுது மனதார கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டுமாம்! நம்முடைய ஆசைகளை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டுமாம்! அப்படி செய்தால் அதிர்ஷ்டம் வரும் என்று நம்பப்படுகிறது. அப்படியான சில சுவாரசிய அதிர்ஷ்ட குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக முதலில் வால் நட்சத்திரம் கருதப்படுகிறது. இது அனைவருக்கும் தெரிந்தது தான், வால் நட்சத்திரம் தோன்றினால் அதை நாம் பார்க்க நேர்ந்தால, உடனே நம்முடைய ஆசைகளை மனதில் நினைத்துக் கொள்வோம். அது கண்டிப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை. அப்படியான நம்பிக்கைகளில் ஒன்று குதிரை லாடம்! இந்த குதிரை லாடம் சாஸ்திரப்படி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்குமாம். இதனால் குதிரை லாடம் வீட்டின் கதவில் இருப்பது எதிர்மறை சக்திகளை விரட்டி அடித்து, நேர்மறையை பெருக்குமாம். மேலும் இந்த குதிரை லாடத்தை பார்க்கும் பொழுது மனதில் உங்களுடைய ஆசைகளை எண்ணிக் கொண்டால் அது விரைவாக நிறைவேறுமாம்.

இந்த வரிசையில் நான்கு இதழ் கொண்ட புல்லை நீங்கள் காண நேர்ந்தால் அதுவும் அதிர்ஷ்டம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புல் பெரும்பாலும் இரண்டு இதழ்களை கொண்டு இருக்கும். ஆனால் நான்கு இதழ்கள் கொண்ட புல் காண நேர்ந்தால் நமக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம். மேலும் நம் மீது இருக்கும் திருஷ்டிகளும் அகலுமாம். அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது பிண ஊர்வலம். இறுதி ஊர்வலத்தின் போது நாம் எதிரே சென்றாலோ அல்லது பார்த்தாலோ நமக்கு அதிர்ஷ்டம் வரும் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் சாஸ்திர ரீதியாகவும் இவ்வாறு கூறப்படுகிறது.

பசு மாடு கன்றுடன் பால் தருவதை பார்த்தாலும் நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது. இந்த நேரத்தில் கடவுளை மனதார நினைத்து நம்முடைய ஆசைகளை வேண்டிக் கொள்ள வேண்டுமாம். மேலும் அப்பொழுது மாட்டையோ, கன்றையோ நாம் தொடக்கூடாது தூரமாக இருந்து பார்த்து ஆசைகளை வேண்டிக் கொள்ள வேண்டும். எண்ணற்ற ஆசைகளை கொண்ட மனிதனுக்கு சீன கலாச்சார ரீதியாக ஆமையை கண்டாலும் அதிர்ஷ்டம் வருமாம். திடீரென உங்களுக்கு ஆமையை காணக்கூடிய வாய்ப்பு அமைந்தால், கூடிய விரைவாகவே உங்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய இருக்கிறது என்று நீங்கள் நம்பலாமாம். அதிர்ஷ்ட கடவுளாக கருதப்படும் குபேரனை அடிக்கடி நீங்கள் காண நேர்ந்தால் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

ஒரு விஷயத்தை தொடர்ந்து நம் கண்களுக்கு இறைவன் காட்டினால் அதனுடன் அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்தை தொடர்பு படுத்தலாம். அந்த வகையில் குபேரனை அடிக்கடி நம்மால் பார்க்க முடிந்தால், பணவரவு காத்திருக்கிறது, எதிர்பாராத வகையில் நீங்கள் திடீர் பணக்காரன் கூட ஆகலாம், இப்படி ஒரு நம்பிக்கையும் உண்டு. இது போல இன்னும் நிறைய பொருட்கள் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்படியாக இருக்கிறது. அந்த வகையில் சிட்டுக்குருவி கூடு கட்டுவது, பிறை நிலவை பார்ப்பது, ஏழு என்னும் எண் அடிக்கடி நமக்கு தெரிவது, வண்டு ரீங்காரம் இடுவது, யானை பிளிருவதை பார்ப்பது, வானவில்லை காண்பது போன்றவையும் அடங்கும்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.