வாழ்வில் பிரச்சனைகள் கைமீறிச் சென்று, இனி வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று விட்டீர்களா? அம்மனுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், உங்கள் பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். – Tamil VBC

வாழ்வில் பிரச்சனைகள் கைமீறிச் சென்று, இனி வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று விட்டீர்களா? அம்மனுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், உங்கள் பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

ஒரு மனிதன் வாழ்வில் மீளா துன்பத்தை அடைந்து இனி வாழவே முடியாது என்னும் நிலையில் கடைசியாக அவன் சரணடைவது தெய்வத்தின் பாதமாக தான் இருக்கும். அப்படி ஒரு இக்கட்டான தருணத்தில் கை கொடுத்து தூக்கி விடும் வல்லமை பொருந்திய தெய்வம் தான் இந்த வாராகி அம்மன். இந்த தெய்வத்தை எப்படி வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் எல்லாம் கரைந்து காணாமல் போகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எல்லா மனிதனுடைய வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் கலந்தே தான் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு துன்பத்திற்க்கு மேல் துன்பம் வந்து விரக்தியின் எல்லைக்கே சென்று இனி வாழவே வழி இல்லை என்ற நிலைக்கு ஆளாகி விடும் போது இந்த அம்மனை நினைத்து மனம் உருகி கண்ணீர் மல்க வழிபட்டால் போதும் நீங்கள் அழைத்த குரலுக்கு வந்து உங்களின் துயர் அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் போக்கி விடும் சக்தி வாய்ந்த தெய்வம் தான் இந்த வராகி அம்மன்.

இந்த அம்மன் மனித உடலிலும் பன்றியின் முதல் வடிவத்திலும் இருப்பதால் வக்கிரமான தெய்வம் என்று நினைத்து வழிபட பலரும் யோசிப்பதுண்டு. எந்த ஒரு தெய்வமும் வக்கிரமான தோற்றத்தில் இருப்பதால் மட்டும் அந்த தெய்வம் வழிபட உகந்ததல்ல, என்று இந்த கருத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் வக்கிரமான தோற்றத்துடன் உருவெடுப்பது நல்லவர்களை காக்க தீயவர்களை அழிக்கவே தானே அன்றி கெடுதல் செய்ய அல்ல. அதனால் இந்த வாராகி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் எந்த அச்சமும் கொள்ளாமல் வழிபடலாம் இந்த வழிபாட்டிற்கும் வாராகி அம்மன் படம் வேண்டும்.

வராகி அம்மன் படத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சுத்தமாக துடைத்து மஞ்சள்,குங்குமத்தால் பொட்டு வைத்து பன்னீர் பூவால் மாலை தொடுத்து போடலாம் அல்லது பூவாகவும் வைக்கலாம். இந்த பன்னீர் பூ கிடைக்காத பட்சத்தில் செவ்வரளி, செம்பருத்தி பூ அல்லது சங்கு இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

வாராகி அம்மன் விக்கிரகமாக உங்கள் வீட்டில் இருந்தால் பன்னீரால் அபிஷேகம் செய்தால் அத்தனை விசேஷம். இல்லை எனும் பட்சத்தில் இந்த வழிபாடு செய்யும் போது ஒரு சின்ன டம்ளரில் இந்த பன்னீரை ஊற்றி வைத்து வணங்கிய பிறகு அதை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். இவர்களுக்கு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகள் வைக்கலாம் குறிப்பாக சர்க்கரை வள்ளி கிழங்கு இந்த அம்மனுக்கு மிகவும் பிடித்த ஒன்று அவ்வளவுதான் இவர்களுக்கு பெரிதாக வேறு எதுவும் வைத்து வணங்க வேண்டியதில்லை இதுவே போதும்.

உங்கள் பூஜை அறையில் இருந்த அம்மனை வைத்து மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்த பிறகு அவர்களுக்கென்று தனியாக ஒரு விளக்கு வைத்து விடுங்கள். மற்ற விளக்குகள் இருந்தாலும் பரவாயில்லை இந்த அம்மனுக்கு தனியாக ஒரு விளக்கை ஏற்றி வாருங்கள். இந்த விளக்கை தொடர்ந்து ஏழு நாட்கள் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த விளக்கை ஏற்றி விளக்கின் முன் அமர்ந்து உங்களின் அந்த தீராத குறைகளை அவர்களிடம் சொல்லி மனம் உருகி வேண்டி வாருங்கள் இந்த ஏழு நாட்கள் நீங்கள் ஏற்றி முடிக்கும் முன்பே நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்த இந்த பிரச்சனைக்கான தீர்வை ஏதோ ஒரு வழியில் இந்த அம்மன் கண்டிப்பாக உங்களுக்கு முடித்துக் கொடுப்பார்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.