உங்களுக்கு ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் இவை தானாம்!! – Tamil VBC

உங்களுக்கு ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் இவை தானாம்!!

வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் என்பது வருவது இயல்பு தான். நம் வாழ்க்கையிலும் இதே போல தான் கஷ்ட நஷ்டங்கள் வரும் போகும், அதை சமாளிப்பது எல்லாம் நம் கையில் தான் உள்ளது. கடவுளின் ஆசிர்வாதத்துடன் நம்முடைய முயற்சியினாலும் சரி செய்து கொள்ளலாம். ஆனால் சில நேரங்களில் நமக்கு தொடர்ந்து கஷ்டங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கும். வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் எதுவும் நம் மனதுக்கு திருப்தியாக இருக்காது. இதைப் போல நம்முடைய நிலைமை சரியில்லை என்று நாமே சில அறிகுறிகளால் உணர்ந்து கொள்வோம். அப்படி உங்களுக்கு தோன்றினால் இந்த ஒரு பரிகாரத்தை செய்து விடுங்கள் அது என்னவென்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் நடக்கக்கூடிய சில நிகழ்வுகளை வைத்து நம் மனதிற்கு ஓரளவுக்கு புரிந்து விடும். இந்த சகுனம் சரியில்லை இப்படி நடப்பது நமக்கு நல்லதல்ல ஏதோ பிரச்சனை வரப் போகிறது போன்ற அறிகுறிகள் எல்லாம் நமக்கு தெரிந்து விடும்.

வீட்டில் அடிக்கடி கண்ணாடி பொருட்கள் உடைவது, காரணம் என்னவென்றே தெரியாமல் உடல் நிலை கோளாறுகள் வருவது, வீட்டில் நிம்மதியான ஒரு மன நிலை இல்லாமல் இருப்பது, அடிக்கடி சின்ன சின்ன விபத்துகள் ஏற்படுவது, சண்டை, சச்சரவு ஏதாவது நடந்து கொண்டே இருந்தால் ஏதோ ஒரு பெரிய பிரச்சனைக்கு முன்னெச்சரிக்கை அறிகுறியாக தான், இவையெல்லாம் நமக்கு நம் தெய்வங்கள் காட்டும். இப்படி எல்லாம் தெரியும் போதே நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதோடு ஒரு சின்ன பரிகாரத்தையும் நீங்கள் செய்து விட்டால் போதும் அந்த பெரிய பிரச்சனைகளில் இருந்து உங்களை காத்துக் கொள்ளலாம் அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இது போல கெட்ட சகுனங்கள் உங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அரச மரத்தை சுற்ற வேண்டியது தான். இந்த அரச மர பரிகாரத்தை சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்து வீட்டில் இருந்து நேராக அரச மரம் இருக்கும் இடத்திற்கு சென்று, அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றி, பஞ்சு திரி போட்டு ஏற்றிய பிறகு, அரச மரத்தை 27 முறை சுற்றி வர வேண்டும்.(இந்த பரிகாரத்திற்கு தேவையானதை முதல் நாளே வாங்கி வைத்து விடுங்கள்) இந்த பரிகாரம் செய்யும் போது எந்த காரணத்தை கொண்டும் மரத்தை தொடக் கூடாது. விளக்கு ஏற்றிய பிறகு நேராக வீட்டுக்கு தான் வர வேண்டும் வழியில் வேறு எங்கும் செல்ல கூடாது.

இப்படி அரச மரத்தை சுற்றி விட்டு வீட்டுக்கு வந்த பிறகு வீட்டில் ஐந்து மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளைத் துணியில் போட்டு மூட்டை போல இந்த தீபத்தை எங்கு வைத்து வேண்டுமானாலும் ஏற்றலாம். பூஜை அறை, வரவேற்பறை எங்கு வேணாலும் ஏற்றலாம் தவறில்லை. இதை ஏற்றும் போது உங்கள் வீட்டிற்குள் இருக்கும் கெட்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் அகலும். உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தும் விலகும்.

இந்த சின்ன பரிகாரத்தை செய்வதால் நமக்கு ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை. ஆனால் இதை செய்யும் போது நமக்கு வரும் பெரிய பெரிய ஆபத்து எல்லாம் நீங்கி விடும் என்றால் நல்லது தானே. இந்த இரண்டையுமே உங்கள் நேரம் சரியில்லை என்று நீங்கள் உணரும் வேளையில் உடனடியாக செய்து உங்கள் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளுங்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.