கொடூரமான கண் திருஷ்டியை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கணுமா? இந்த 1 பொருளை மட்டும் வாசலில் கட்டி வையுங்கள் – Tamil VBC

கொடூரமான கண் திருஷ்டியை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கணுமா? இந்த 1 பொருளை மட்டும் வாசலில் கட்டி வையுங்கள்

தீராத கண் திருஷ்டி ஒருவர் மேல் இருந்தால் வாழ்வில் அவரால் நிச்சயமாக முன்னேற்றம் அடையவே முடியாது. மீண்டும் மீண்டும் தோல்விகளும், பிரச்சனைகளும் ஒரு மனிதனை சூழ்வதற்கு காரணம் அடுத்தவர்களுடைய தீராத கண் திருஷ்டியும் ஒன்று. மேலும் மேலும் ஒரு மனிதன் சீக்கிரத்தில் முன்னேற்றம் அடைகின்றான் என்றால், அவனுடைய சொந்த பந்தங்களே, அவன் முன்னேற்றத்தை தடைப்படுத்தும் அளவிற்கு வயிற்று எரிச்சல் படும். இது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்.

இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள என்ன செய்வது. மாதம் ஒருமுறை நம் குடும்பத்திற்கு கண் திருஷ்டியை கழிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அமாவாசை நாள் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்று மட்டுமாவது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுத்தி போடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய விருப்பம். கல் உப்பு சுற்றி போடலாம். சிவப்பு நிற ஆலம் சுற்றி போடலாம். சில பேர் சிவப்பு சாப்பாடு சுற்றி போடுவார்கள். சில பேர் வெறும் கற்பூரம் சுற்றி போடுவார்கள். சில பேர் கடுகு மிளகாய் உப்பு இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து சுற்றி போடுவார்கள்.

அப்படி இல்லை என்றால் கருப்பு மிளகு, கடுகு, கருப்பு எள் இந்த மூன்று பொருட்களை சுற்றி போட்டாலும் வீட்டில் இருப்பவர்களுடைய கண் திருஷ்டி பொசிங்கி போகும். இந்த பொருட்களை எல்லாம் சுற்றி நெருப்பில் போட வேண்டும். பெரும்பாலும் இது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இன்று அம்மாவாசை திருஷ்டி கழிக்க வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை சுற்றி போட்டாவது குடும்பத்திற்கு திருஷ்டியை கழித்து விடுங்கள். இது முதல் விஷயம்.

அடுத்தபடியாக உங்களுடைய வீட்டிற்குள் பொறாமை எண்ணம் கொண்டவர்கள் வருவார்கள். உங்கள் வீட்டிற்கு தீங்கு நினைக்க கெட்ட சக்திகளை ஏவி விட, மனதில் முழு அழுக்கோடு யாராவது வந்தாலும் சரி அந்த பாதிப்புகள் உங்களை அண்டாமல் இருக்க வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியையும் நுழையவிடாமல் பாதுகாக்க, இந்த ஒரு பொருளை நிலை வாசலில் கட்ட வேண்டும்.

அது எந்த பொருள். வசம்பு. நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ரோட்டோர கடைகளிலோ இது கிடைக்கும். அதை பேரம் பேசாமல் வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய வசம்பை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சுப் போட்டு உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, குலதெய்வத்தின் பெயரை 48 முறை சொல்ல வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இறைவனைப் பார்த்தவாறு அமர்ந்து இந்த வழிபாட்டை செய்யுங்கள்.

அதன் பின்பு உங்களுடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குலதெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இந்த முடிச்சை கொண்டு போய் நிலை வாசலில் அமாவாசை நாள் அன்று கட்டி விடுங்கள். அவ்வளவு தான். இரவு 10 மணிக்கு முன்பு எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களை வீட்டை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகளும் நல்ல சக்திகளாக மாறும். வீட்டிற்குள் கண்ணுக்கு தெரியாமல் எந்த ஒரு கெட்ட சக்தியாலும் நுழைய முடியாது. கெட்ட எண்ணத்தோடு வீட்டிற்குள் வருபவர்களின் எதிர்மறையை, நிலை வாசலில் இருக்கும் வசம்பு ஈர்த்துக் கொள்ளும்.

அமாவாசை அன்று பிரார்த்தனை செய்து கொண்டு குலதெய்வத்தை அழைத்து வசம்பை சக்தியூட்டி நிலை வாசலில் கட்டி இருக்கிறீர்கள். உங்கள் வீடே கோவிலாக மாறுவதற்கு இந்த ஒரு வசம்பு போதும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அந்த வசம்மை கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிய வசம்பை கட்டிக் கொள்ளலாம்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.