2023 ஆம் ஆண்டில் அதிஷ்டம் அடிக்க உள்ள ராசிகாரர்கள் யார் தெரியுமா ? – Tamil VBC

2023 ஆம் ஆண்டில் அதிஷ்டம் அடிக்க உள்ள ராசிகாரர்கள் யார் தெரியுமா ?

2022 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்த ஆண்டில் உங்களுள் பலர் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம். சிலர் இந்த ஆண்டில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தை கண்டிருக்கலாம். இவையெல்லாம் ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைப் பொறுத்தது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றவுள்ளன. இதனால் 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

உங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்குமா இல்லையா என்பதை அறிய ஆவலாக உள்ளதா? அப்படியானால் கீழே 2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்
கணிப்புகளின் படி, மிதுன ராசிக்காரர்களுக்கு 2023 அதிர்ஷ்டமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும். இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் இலக்குகளை அடைவார்கள். ஒருவேளை உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தால், அதை நோக்கி செயல்படத் தொடங்குங்கள். இதனால் 2023 ஆம் ஆண்டில் உங்களின் குறிக்கோளை அடைவீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். விளையாட்டு மற்றும் திரைப்படத் துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வணிகர்கள் இந்த ஆண்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

ரிஷபம்
2023 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். இந்த ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களின் முயற்சிகள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் அதிர்ஷ்டசாலியாக உணரமாட்டார்கள். அதனால் மனதளராமல் கிடைக்கும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்த வேண்டும். பண விஷயத்தில் 2023 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இல்லாவிட்டாலும், காதல் வாழ்க்கை பிரமாதமாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமானதாக இருக்கும்.

துலாம்
2023 ஆம் ஆண்டில் காதல், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் ராசி தான் துலாம். இந்த துலாம் ராசியின் அதிபதி காதல், அழகு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக விளங்கும் சுக்கிரன் ஆவார். எனவே 2023 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் இலக்குகளை அடைவீர்கள். இந்த ஆண்டில் உங்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் முன்னேற்றத்திற்கான பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்துங்கள். அதற்கு இந்த ஆண்டில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இந்த ஆண்டில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வெற்றியில் தான் முடியும். என்ன தான் 2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் சாதகமாக இருந்தாலும், உங்கள் வேலையின் தரத்தை சற்றும் குறைத்துவிடாதீர்கள். கடினமாக உழைத்தால், நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள். உங்களின் கனவுகள் இந்த ஆண்டின் நனவாகும். திருமணாகாதவர்கள், இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பீர்கள்.


விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் பல பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமான வாழ்க்கை சீர்திருத்தங்கள் உங்களுக்கு விரைவில் முன்னேற தேவையான பலததை வழங்கும். இந்த ஆண்டில் கிரகங்களின் நிலையால் எந்த பற்றாக்குறையும் இருக்காது. நிதி நிலை அற்புதமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எம்.என்.சி கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.