8 ஆண்டுகளுக்கு பின் நட்சத்திர ஜோடிக்கு வாரிசு விரைவில் பெற்றோராக போகும் எங்களுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்! – Tamil VBC

8 ஆண்டுகளுக்கு பின் நட்சத்திர ஜோடிக்கு வாரிசு விரைவில் பெற்றோராக போகும் எங்களுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்!

தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, வெண்ணிலா வீடு போன்ற படங்களில் செந்தில் நடித்துள்ளார்

கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா 30க்கும் மேற்பட்ட தொடர்கள், சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்

நடிகர் செந்தில் – ஸ்ரீஜா தம்பதி வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஸ்ரீஜா. இதில் அவருக்கு ஜோடியாக செந்தில் நடித்திருந்தார்.

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில், இருவரும் 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஸ்ரீஜா கர்ப்பம் ஆகியுள்ளார். அவருக்கு வளைகாப்பு நடந்துள்ள முடிந்துள்ளதாக, அவரது கணவர் செந்தில் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அவர், ‘நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம், எங்களுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.