சார்லஸ் கமிலாவுக்குப் பதிலாக டயானாவை மணந்ததற்கான உண்மையான காரணம்.
அரச குடும்பம் எடுத்த முடிவையடுத்தே கமிலாவை அவர் முதலில் மணக்கவில்லை என வெளியான தகவல்.
மன்னர் சார்லஸ் கமீலாவை முதலில் திருமணம் செய்யாமல் டயானாவை மணந்ததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது.
சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்றது, இதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் முன்னரே கமிலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
சார்லஸ் – கமிலா வேறு நபர்களை திருமணம் செய்வதற்கு முன்னரே உயிராக காதலித்து வந்த நிலையில் அவர்கள் மண வாழ்க்கையில் அப்போது இணையவில்லை. அதன்படி சார்லஸ் டயனாவை விவாகரத்து செய்தபின்னர், கமிலா ஆண்ட்ரூவை விவாகரத்து செய்த பின்னரும் கடந்த 2005ல் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் கூற்றுபடி, அரச குடும்பம் கமிலாவை ஒரு பொருத்தமான இளவரசியாக பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அரச குடும்ப நிபுணர் பெடெல் ஸ்மித்தின் கூற்றுப்படி, கமிலா அனுபவம் வாய்ந்த மற்றும் பல விடயங்களை அறிந்த பெண்ணாக கருதப்பட்டிருக்கிறார்.
சார்லஸை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு அப்பாவிப் பெண்ணை தேர்வு செய்யவே அரச குடும்பம் விரும்பியது. அதற்கு சரியான நபராக டயானா தான் இருப்பார் என அவர்கள் நினைத்தனர் என கூறப்பட்டுள்ளது.
அதே போல சார்லஸும் கமிலாவும் ஆரம்பத்தில் பிரிந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தி டைம்ஸ் வெளியிட்ட தகவலில், கமிலாவுக்கு நிச்சயதார்த்தம் என பொய்யான அறிவிப்பை அவர் தந்தை வெளியிட்டிருந்தார். பின்னர் உண்மையிலேயே அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.