சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய தாமரை! – Tamil VBC

சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய தாமரை!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார்.

படப்பிடிப்பில் இருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.


இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’திரைப்பட படப்பிடிப்பில்’ என்ற கேப்ஷனுடன் கூடிய இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதில் சிங்கம் புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஒரு தெரு கூத்து கலைஞகராக அறியப்பட்டு, ரசிகர்களின் பேராதரவோடு தற்போது வெள்ளித்திரை வாய்ப்பபை கைப்பற்றி திரைப்பட நடிகையாக மாறியுள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

விரைவில் இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.