சரிந்தது தங்கம் விலை மகிழ்ச்சியில் தங்கநகை பிரியர்கள் ! – Tamil VBC

சரிந்தது தங்கம் விலை மகிழ்ச்சியில் தங்கநகை பிரியர்கள் !

தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்த விலை குறைவு இந்த வாரத்திலும் நீடிக்கிறது, சவரன் மீண்டும் ரூ.36ஆயிரத்துக்குள் சரிந்தது.

இன்றைய தங்கம் விலை
தங்கம் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு ரூ.328 குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,651 ஆகவும், சவரன், ரூ.37,208 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 41ரூபாய் சரிந்து ரூ.4,610ஆக குறைந்தது. சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்து, ரூ.36,880ஆக குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த வாரத்தில் கடும் ஏற்ற இறக்கத்துடனே சென்றாலும் கிராமுக்கு ரூ.18 அளவில் தான் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று, தங்கத்தின் விலை பெரிதாக மாற்றமில்லை, சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே உயர்ந்தது.

ஆனால் இன்று அதிரடியாக தங்கம் விலை கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்துள்ளது.

சந்தை வல்லுநர்கள் கூறுவது என்ன?
இந்த திடீர் விலை குறைவு, தங்க நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை நாளுக்குநாள் பெரும் மாற்றத்துடன் நகர்ந்துள்ளதால், விலை குறைந்துள்ளபோதே வாங்குவது சிறப்பு என்று சந்தை வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்திவிட்டதால், உலகளவில் மற்ற நாடுகளின் கரன்ஸிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, டாலர் மதிப்பு வலுவடைந்துள்ளது.

இங்கிலாந்து பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு டாலருக்கு எதிராகச் சரிந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. டாலருக்கு எதிராக பல நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பும் சரிந்துள்ளதால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது.

இதனால் தான் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.60.70ஆகவும், கிலோ ரூ.60,700 ஆகவும் விற்கப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.