வெள்ளி மோதிரம் எந்த விரலில் போடணும் தெரியுமா? நீங்களே ஆச்சரியப்படுவீர்களாம் – Tamil VBC

வெள்ளி மோதிரம் எந்த விரலில் போடணும் தெரியுமா? நீங்களே ஆச்சரியப்படுவீர்களாம்

நாம் வெள்ளி மோதிரம் அணிவதற்கும், செல்வம் பெருகுவதற்கும் தொடர்பு இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம். அதாவது மனதை குறிக்கும் மனோ காரகனான சந்திரன் நம் உடலில் படுவது மிகவும் நல்லது. அதாவது வெள்ளி மோதிரத்தை அணிவது மிகவும் சிறந்தது. வாருங்கள் இந்த வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் கிடைக்கக்கூடிய சிறப்புகள் பற்றியும், இதனை எவ்வாறு அணிய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும், பன்னீரும் கலந்த நீரில் கழுவி உங்கள் இஷ்ட தெய்வம், சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின் உங்கள் விரலில் அணிந்து கொள்ளவும். மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் பதித்து அணிந்து கொள்ள செல்வ நிலையில் உயர்வு கிடைக்கும்.

தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், க்லீம் என்ற மந்திரம் பதித்து மோதிரம் அணியலாம். வாழ்வில் செல்வ வளமும், அதிர்ஷ்டமும் பெருகும். அழகும், மன அமைதியும் உண்டாகும். வலது கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிவதன் மூலம் மனம் சார்ந்த ஆள் மனம் இருக்கிறதாம்.

இடது ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிந்து, செல்வத்தை வசீகரிக்க நினைக்கின்றேன் என அடிக்கடி நினைக்க வேண்டும். பொதுவாக நமது வலது மூளை அதிக பாசிட்டிவாக இருக்கும் போது நாம் நினைக்கும் காரியங்கள் உண்மையாகவே நடக்கிறதாம். அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும். அதிக பண புழக்கம் இருக்கும். வாழ்வில் மென்மேலும் உயர முடியும். இது போன்று நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கோபத்தைக் குறைத்து, வசீகர சக்தியை அதிகரிக்கும்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.