ராகுல் காந்தி அதிரடியாக கைது! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் – Tamil VBC

ராகுல் காந்தி அதிரடியாக கைது! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

ராகுல் காந்தி கைதுசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய நாடாளுமன்ற வளாகம் முதல் விஜய் சவுக் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

இதையடுத்து, ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்த நிலையில் ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ள, யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் வியாழக்கிழமை மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டது. அதன்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தியுடன், அவரது பிள்ளைகளான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அமலாக்கத்துறைக்கு எதிராக பேனர் பதாகைகளை ஏந்தி சென்ற அவர்களை, போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தனர். இதையடுத்து, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்களை பொலிசார் குண்டுக் கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.