சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தும் பிரபல தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம் – Tamil VBC

சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தும் பிரபல தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம்

பொதுவாக நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாக தொழில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவார்கள். பலர் ரியல் எஸ்டேட் தொழில், சொந்தமாக ஆடைகளின் ஆன்லைன் வியாபாரம், நகைக்கடை என வைத்துள்ளனர்.

நடிகர்களும் நாயகிகளுக்கு இணையாக இல்லை என்றாலும் அவர்களும் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் சிலர் சொந்தமாக உணவகம் திறந்துள்ளனர்.

யார் யார் எங்கு, என்ன பெயரில் உணவகங்கள் வைத்துள்ளனர் என்ற விவரத்தை காண்போம்.

கருணாஸ்

காமெடியனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது அரசியலில் ஈடுபட்டு பயணித்து வருகிறார். இவர் சாலிகிராமத்தில் கருணாஸ் நான் என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.

ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளரும், நடிகருமான இவர் கேகே நகரில் சாப்பிடலாம் வாங்க என்ற உணவகம் நடத்துகிறார்.

ஆர்யா

தமிழ் சினிமாவின் துறுதுறு நாயகனாக இவர் சமீபத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாஸாக நடித்து எல்லோரையும் அசற வைத்துவிட்டார். இவர் அண்ணாநகரில் Sea Shell என்ற பெயரில் ஹோட்டல் வைத்துள்ளார்.

சூரி

நடிகர் சூரி மதுரையில் தொடர்ந்து அம்மா உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் திறந்து வருவது நமக்கே நன்கு தெரிந்த விஷயமாக உள்ளது. தி நகரில் கூட அம்மா உணவகம் வைத்துள்ளார்.

ஜீவா

இவரும் தி நகரில் One Mb என்ற பெயரில் உணவகம் ஒன்று நடத்துகிறார்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.