சிம்பு பட நடிகை சினிமாவை விட்டே ஓட்டம்! காரணம் இது தானாம் – Tamil VBC

சிம்பு பட நடிகை சினிமாவை விட்டே ஓட்டம்! காரணம் இது தானாம்

நடிகர் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் சனா கான்.

அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். மற்றைய மொழிகளிலும் சில படங்கள் அவர் நடித்து இருக்கிறார்.

அவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார். அந்த மதத்தின் பெண்கள் போல எப்போதும் ஹிஜாப் அணிந்து தான் புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார்.

அதே மதத்தை சேர்ந்த ஒருவரை 2020ல் திருமணம் செய்துகொண்டார் அவர்.

தற்போது சனா கான் தான் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.

சினிமாவில் பணம், புகழ் எல்லாம் கிடைத்தாலும், நிம்மதி என்ற ஒன்று கிடைக்கவில்லை. அதனால் தான் ஒதுங்கினேன் என அவர் கூறி இருக்கிறார்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.