டெல்லியில் 2020-ம் ஆண்டுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், 30 மொழிகளில் இருந்து மொத்தம் 305 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டன.
தேசிய விருதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதே படத்தில் அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி அப்படத்துக்கு இசையமைத்ததால் ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தேசிய விருது வென்றுள்ள நடிகர் சூர்யா மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் சூரரைப் போற்று படத்தை தவிர மற்ற படங்களுக்காக தேசிய விருதினை பெற்ற கலைஞர்களுக்கும் சூர்யா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தன்னை முதல்முதலாக நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் தயாரிப்பாளர் மணிரத்னம் ஆகியோருக்கும் நன்றியினை தெரிவித்துள்lளார்.
பின் சூர்யா எப்போதும் உறுதுணையாக இருக்கும் தன் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரினை குறிப்பிட்டு நன்றிகளை தெரிவித்துள்ளார்.