நடிகை நித்யா மேனன் மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து வருபவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
மேலும் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே சமீபத்தில் நித்யா மேனன் பிரபல மலையாள நடிகரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவின. மேலும் அவர் நித்யா மேனன் திரையுலகிற்கு நுழையும் முன்பே நண்பர்களாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
மேலும் தற்போது இது குறித்து பேசியுள்ள நித்யா மேனன் “இணையத்தில் பரவி வரும் அந்த தகவல்கள் முற்றிலும் பொய், இது போன்ற தகவல்களை பரப்பும் முன் ஊடகங்கள் உண்மையைச் சரிபார்க்க முயற்சி எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.