தினமும் வீட்டில் கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து எரிங்க.. அப்பறம் நடக்குறத பாருங்க – Tamil VBC

தினமும் வீட்டில் கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து எரிங்க.. அப்பறம் நடக்குறத பாருங்க

தினமும் கடவுளை வழிபடும் போது விளக்கேற்றி, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை காண்பித்து வழிபடுவது வழக்கம். மேலும் சுப காரியங்களின் போதும் இம்மாதிரி செய்யப்படுவது வழக்கம். ஏனெனில் இவ்வாறு செய்வது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி, நேர்மறை ஆற்றலை சூழ்ந்திருக்கச் செய்வதாக நம்பப்படுகிறது.

மேலும் வாஸ்துப்படி, வீட்டில் தினமும் கற்பூரத்தை ஏற்றி வீட்டைச் சுற்றி காண்பித்து வந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதுடன், வீட்டில் சந்தோஷம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவையும் நிறைந்திருக்கும். இது தவிர ஒருவர் தங்களின் வீட்டில் தினமும் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் கற்பூரத்தை தினமும் ஏற்றி வந்தால், வீட்டில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தைக் காணலாம். மேலும் பல பிரச்சனைகளைப் போக்கவும் கற்பூரம் உதவி புரிகிறது. இப்போது தினமும் வீட்டில் கற்பூரத்தை ஏற்றுவதால் ஏற்படும் மாற்றங்களைக் காணலாம்.

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க, வீட்டின் அனைத்து மூலைகளிலும் ஒரு கற்பூரத்தை வைக்க வேண்டும். இதன் மூலம் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்குவதோடு, நேர்மறை ஆற்றலும் வீட்டில் சூழ்ந்து இருக்கும். கற்பூரங்கள் கரைந்து போனால், வாஸ்து தோஷம் நீங்கிவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். வேண்டுமானால், மீண்டும் கற்பூரங்களை வீட்டின் மூலையில் வைத்துக் கொள்ளலாம்.

சாஸ்திரங்களின் படி, வீட்டில் தூப தீபம் அல்லது கற்பூரத்தை ஏற்று வைப்பதனால், மனம் அமைதியாகும். இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில், தூப தீபம் அல்லது கற்பூரத்தில் இருந்து வெளிவரும் நறுமணம் வீட்டில் பரவுவதால், இது மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனுடன் மன அழுத்தமும் குறைகிறது. எனவே தினமும் காலை மற்றும் மாலையில் வீட்டில் விளக்கு மற்றும் கற்பூரத்தை ஏற்றி வழிபடுங்கள்.

வீட்டில் கற்பூரத்தை ஏற்றுவதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவ ஆரம்பிக்கிறது. இது வாழ்வில் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கான பாதையைத் திறக்கிறது. இதன் மூலம் குடும்பத்தில் சண்டைகள் குறைந்து, மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவை நீடிக்கிறது.

நம்பிக்கைகளின் படி, கற்பூரத்தை தினமும் சில்வர் அல்லது பித்தளை பௌலில் தான் ஏற்ற வேண்டும். இது மட்டுமின்றி, படுக்கையறையை சுத்தம் செய்த பின்னர் தினமும் கற்பூரத்தை ஏற்ற வேண்டும். இதனால் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, இனிமையாக இருக்கும்.

தினமும் பணி செய்யும் இடம் அல்லது வீட்டில் 3 கற்பூரத்துடன் கிராம்பையும் சேர்த்து எரிக்க வேண்டும். இதனால் பொருளாதார நிலைமை வலுவாகும் என்ற மத நம்பிக்கை ஒன்று உள்ளது. மேலும் இச்செயலால் வாழ்வில் உள்ள உணவு மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

வீட்டில் கற்பூரம் மற்றும் தூப-தீபத்தை ஏற்றுவதற்கு பின்னணியில் ஒரு அறிவியல் காரணங்களும் உள்ளன. அது என்னவெனில், கற்பூரம் மற்றும் தூப தீபத்தை வீட்டில் ஏற்றுவதால், வீட்டினுள் சுற்றிக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இது தவிர, வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். இதன் மூலம் மனம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.