பாலிவுட் படத்தில் சூர்யா ஒரு ருபாய் கூட வாங்காமல் நடித்த சூர்யா – Tamil VBC

பாலிவுட் படத்தில் சூர்யா ஒரு ருபாய் கூட வாங்காமல் நடித்த சூர்யா

நடிகர் சூர்யா என்னதான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் கமல்ஹாசன் அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு ரோலில் விக்ரம் படத்தில் நடித்து இருந்தார்.

ரோலக்ஸ் என்ற அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சூர்யாவுக்கு கமல் ஒரு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை கிப்ட்டாக கொடுத்தார்.

சூர்யா இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளம் எதுவுமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் சூர்யா ஒரு ருபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து இருக்கிறார்.

 

மாதவன் நடித்து இருக்கும் ராக்கெட்ரி படத்தில் தான் சூர்யா சம்பளம் வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளார். அதே படத்தில் ஷாருக் கானும் கெஸ்ட் ரோலில் தோன்றி இருக்கிறார். அவரும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மும்பையில் நடந்த ஷூட்டிங்கிற்கு விமான டிக்கெட் கட்டணம் கூட வாங்கவில்லை. கேரவன், அசிஸ்டன்ட் என எதற்காகவும் சூர்யா பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார் என மாதவன் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான ராக்கெட்ரி வரும் ஜுலை 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

 

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published.