நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த இயற்கை உணவுப் பொருட்கள்! – Tamil VBC

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த இயற்கை உணவுப் பொருட்கள்!

நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ அதைப் பொருத்து நாம் ஆரோக்கியமாக வாழலாம்.அப்படியெனில் எல்லோரும் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது.நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் ஏராளமாக உள்ளன.அவற்றை பற்றி இங்கே காணலாம்.யோகர்ட்:யோகர்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும் பாக்டீரியோசின்கள் எனப்படும் பொருட்களை உருவாக்குகிறது. இதனால் பாக்டீரியா தொற்றால் வரக்கூடிய நோய்கள் நமக்கு வருவதில்லை. மேலும் யோகர்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் நம் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

துளசி மற்றும் கருப்பு மிளகு:தினமும் உங்க நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க 3 – 5 துளசி இலைகள் மற்றும் மிளகை வெறுமனே மென்று வரலாம். இது உங்க சுவாச பாதையில் உள்ள அழற்சியை போக்குகிறது. இதே மாதிரி நீங்கள் கருப்பு மிளகையும் சாப்பிடலாம்.இஞ்சி மற்றும் பூண்டு:இஞ்சி மற்றும் பூண்டு நம் நோயெதிப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பூண்டில் அல்லிசின், துத்தநாகம், சல்பர் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ ஆகியவை உள்ளன. எனவே இஞ்சி டீ மற்றும் பூண்டு பால் என்று குடித்து வருவது உங்க நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.தண்ணீர்:மேற்கண்ட பொருட்களை எடுத்துக் கொள்வதோடு உங்க நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க நீரும் அவசியமாகிறது. எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published.