ஷாம்பு போட்டு குளிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா? – Tamil VBC

ஷாம்பு போட்டு குளிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

பொதுவாக தலைமுடியானது அனைவருக்கும் அழகின் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது. முடியால் தான் பலரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

ஆனால், தலைமுடியை பராமரிப்பதில் பலரும் தவறு செய்துவிடுகிறார்கள். இதனால் முடி உதிர்வை சந்திக்க நேரிடுகிறது. தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை தினமும் நீங்கள் பயன்படுத்துபவர்கள் என்றால் உங்களுக்கான எச்சரிக்கை பதிவு தான் இது.

ஏனென்றால், ஷாம்பூவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பல பாதிப்பை உண்டாக்கும். இதனால், உங்கள் தலையில் அதிகமாக வியர்வை சுரக்கிறது.

உங்கள் தலை பிசுபிசுப்பை உண்டாக்கும். தலையில் இறந்த செல்கள், தூசி, வியர்வை, எண்ணெய், பொடுகு ஆகியவற்றின் காரணமாக அதிகமாக அரிப்பு ஏற்படுகிறது.

ஷாம்புவானது என்னதான் தலையில் உள்ள அழுக்கை போக்க உதவினாலும்,  அளவுக்கு அதிகமாக அன்றாடம் பயன்படுத்தினால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.

ஷாம்புவை அன்றாடம் பயன்படுத்தினால், நிச்சயம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

அதிலும், முக்கியமாக இந்த பொருட்கள் விலை மிகவும் குறைவாக விற்கப்படும் ஷாம்புவில் அதிக அளவில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மேலும், ஷாம்புவில் உள்ள சோடியம் லாரில் சல்பேட் கண்களை பாதித்து, நாளடைவில் பார்வையையே பறித்துவிடும்.

தினமும் ஷாம்பு போட்டு குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களின் உற்பத்தி குறைந்து, அதனால் சரும பிரச்சனைகள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

 

விழிப்புணர்வு

என்ன தான் தலையில் உள்ள அழுக்கை போக்க ஷாம்பு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதனை அளவாகப் பயன்படுத்த வேண்டும். அதிலும் வாரம் 2 முறை பயன்படுத்துவது தான் நல்லது. முக்கியமாக ஷாம்பு வாங்கும் முன், அதில் SLS என்னும் சோடியம் லாரில் சல்பேட் இல்லாததை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published.