தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ! – Tamil VBC

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் !

தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்துவரும் நிலையில், கடந்த 4 வாரங்களாகவே சரிவில் இருந்து வந்த நிலையில், இந்த வார இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது.தங்கம் விலை ஏற்றத்திற்கு முக்கியகாரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்ச விலையில் இருந்து சரிவினைக் கண்டுள்ளது.

இது தான் தங்கம் விலை ஆதரவாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து சர்வதேச பங்கு சந்தைகளானது சரிவினைக் கண்டு இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு ஆனது நடப்பு வாரத்தில் ஆல் டைம் லோவினை எட்டியுள்ளது.

ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். நேற்றைய நாளின்படி தங்கத்திம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று மாலை இதன் விலை ரூ. 4793 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 24 உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி ரூ. 38,344-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 192 உயர்ந்து ரூ.38,536-க்கு விற்பனையாகிறது.

பல பொருட்களின் விலை வாசியும் ஏறியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைப்பெறுவதால் தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கத்தையே கண்டுள்ளது. எனவே தங்கம் குறையும் நாட்களில் வாங்குவதே சிறந்தது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.