மறந்தும் இந்த செடியை தனியா வளர்க்காதீங்க... இல்லன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்..!! - Tamil VBC

மறந்தும் இந்த செடியை தனியா வளர்க்காதீங்க… இல்லன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்..!!

இன்றைய தலைமுறையினருக்கு செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வீட்டின் முன் அதிக இடமிருந்தால், சிறிய தோட்டம் மாதிரி உருவாக்கி அதனை பராமரித்து வருவது மனதிற்கு ஒருவித அமைதியையும், அந்த செடிகளையும் பார்க்கும் போது சந்தோஷமும் அதிகரிக்கச் செய்யும்.

சரி, செடி வளர்க்க ஆசையாக உள்ளது, என்ன செடி வளர்ப்பது, அதனை முறையாக பராமரிப்பது எப்படி என்ற பல கேள்விகள் அனைவருக்கு எழுவது சாதாரணம் தான். செடி வளர்ப்பதில் நிறைய விஷயங்கள் உள்ளன.

வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நீக்குவது, வீட்டில் சந்தோஷம் அதிகரிப்பது, அதிர்ஷடத்தை வரவழைப்பது, துரதிர்ஷ்டத்தை விரட்டுவது என செடி வளர்ப்பில் நிறைய விஷயங்கள் கூறப்படுகின்றன. மேலும், சில செடிகளை ஒற்றையாக வளர்க்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வீட்டில் ஒற்றை செடிகளை வளர்ப்பதால் பிரச்சனைகள், தம்பதியர் ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. சரி, வீட்டில் எந்தெந்த செடிகளை, எங்கெங்கு வளர்க்கலாம் என்பதை பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.

வெற்றிலை செடிவிருட்ச சாஸ்திரப்படி, வெற்றிலை செடியானது ஆண் செடியாக கருதப்படுகிறது. எனவே, வெற்றிலை செடியை மட்டும் வீட்டில் தனியாக வளர்க்கவே கூடாது. அத்துடன் வேறு செடி எதையாவது வளர்க்க வேண்டும். வெற்றிலை செடியை தனியாக வைத்தால், தம்பதியர் இடையே ஒற்றுமை குறைபாடு, வம்ச விருத்தியில் சிக்கல் போன்றவை ஏற்படக்கூடும். வெற்றிலைச் செடியை வீட்டின் பின் புறத்தில் வளர்ப்பது தான் நல்லது.

கறிவேப்பிலை செடிகறிவேப்பிலை செடி மகிமை வாய்ந்ததாக இருந்தால் கூடு, அதனை தனியாக வளர்க்கக்கூடாது. அப்படி தனியாக வளர்த்தால் கணவன் மனைவி இடையே சண்டை அடிக்கடி ஏற்படும். சிறிது இடத்திலேயே செழித்து வளரக்கூடிய கறிவேப்பிலை, வீட்டில் சுபீட்சத்தை அதிகரிக்கக் செய்யும். இவற்றில் நிறைய நன்மைகள் இருந்தாலும், தனியாக மட்டும் வளர்த்து விடாதீர்கள். கறிவேப்பிலையுடன் பப்பாளி சேர்த்து வளருங்கள். வீட்டில் பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கும்.


பப்பாளிபப்பாளி செடியை தனியாக வளர்த்தாலும், குடும்பத்தில் தேவையில்லாத சிக்கல்கள், தகராறுகள் போன்றவை தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும். எனவே, பப்பாளி மரத்தை தனியாக வளர்ப்பது நல்லதல்ல. எனவே, பப்பாளி மரத்தோடு, கறிவேப்பிலை செடியையும் சேர்த்து வளருங்கள். இவை இரண்டும் சேர்த்து வளர்ப்பதால் கணவன் மனைவி பிரச்சனை ஏற்படாமல், அன்யோன்யம் அதிகரிக்கச் செய்யும்.

துளசிச் செடிவாசனை, தெய்வீக குணம், நல்ல அதிர்வலைகள் நிறைந்த செடிகளில் ஒன்று துளசி. வீட்டின் முன் பகுதியில், குறிப்பாக வீட்டெதிரில் துளசிச் செடியை வளர்ப்பதன் மூலம், வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிறைந்திருக்கும்.

மருதாணிதுளசிச் செடியை போலவே, மருதாணி செடியும் நல்ல நறுமணம் கொண்டது. மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படும் மருதாணிச் செடி, முட்கள் கொண்டதாக இருந்தாலும், வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. இதனை, வீட்டின் முன் பகுதியில் வளர்ப்பது சிறந்தது.

அரளிச்செடிஅரளிச் செடி தெய்வீக குணங்கள நிறைந்ததாக இருந்தாலும், அவை தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்தப்பட கூடியவை. பூஜை முதல் அர்ச்சனை வரை அனைத்திற்கும் அரளிப் பூக்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றை வீட்டின் முன்புறத்தில் வளர்க்காமல், பின்புறத்தில் பயன்படுத்துவதே சிறந்தது.

முட்கள் நிறைந்த செடிகள்முட்கள் நிறைந்த செடிகளான, ரோஜா, வெள்ளைவேலான், எலுமிச்சை, பன்னீர் புஷ்பம் போன்றவற்றை வீட்டில் வளர்க்கலாம். இருப்பினும், அவற்றை வீட்டில் பின்புறத்தை வளர்ப்பது சிறந்தது.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *