உங்க கையில இந்த ரேகைகள் மட்டும் இருந்தால் உங்களுக்கு பணத்துக்கு குறைவே இல்லையாம்..!! – Tamil VBC

உங்க கையில இந்த ரேகைகள் மட்டும் இருந்தால் உங்களுக்கு பணத்துக்கு குறைவே இல்லையாம்..!!

உங்களுக்கான செல்வத்தின் ரகசியம் ஏற்கனவே உங்கள் கைரேகைகளில் குறியிடப்பட்டுள்ளதாக கைரேகை ஜோதிடம் கூறுகிறது. அதாவது கைரேகை ஒருவரது நிதி நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவாக சொல்லுமாம். உதாரணமாக, உங்கள் கைகளில் உள்ள நிதி ரேகை நீளமாக இருந்தால், உங்களிடம்

செல்வமானது அதிகளவு தேங்குவதோடு, குவியவும் செய்யும். அதே சமயம் கையில் உள்ள ரேகை, ஒருவர் எவ்வளவு செலவு செய்வார் என்பதையும் கூறும் என்பதால், அதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.நீங்கள் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், சம்பாதிக்கும் பணத்திற்கு அதிகமாக செலவுகளை

செய்பவராயின், அவர்களது நிதி நிலைமை எப்போதும் சிறப்பாக இருக்காது. ஆகவே நீங்கள் உங்களது நிதி நிலைமையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இந்த கட்டுரையில் கையில் உள்ள ரேகை ஒருவரது நிதி நிலைமை குறித்து கூறும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அறிகுறி 1படத்தில் காட்டியவாறு கையில் நடு விரலை நோக்கி நேராக ஒரு ரேகை சென்றால், அது ஒருவரது நிதி நிலைமையைப் பற்றி தான் சொல்கிறது என்று அர்த்தம். ஒருவரது கையில் உள்ள இந்த ரேகையின் அடிப்பகுதி மிகவும் ஆழமாக காணப்பட்டால், அவர் இளம் வயதிலேயே செல்வந்தராக இருப்பாராம்.

ஒருவேளை இந்த ரேகையின் மேல் பகுதி ஆழமாக இருந்தால், அவர்கள் வாழ்வின் பிற்காலத்தில் செல்வந்தராகும் வாய்ப்புள்ளதைக் குறிக்குமாம். மேலும் இந்த ரேகை ஒருவரது வாழ்க்கை குறித்தும் கூறுகிறதாம். அதில் அடிப்பகுதியில் இருந்து நடுவிரலை நோக்கி செல்லும் ரேகை மிகவும் ஆழமாகவே இருந்தால், அவர்களது வாழ்க்கை நிலையானதாகவும், லாபகரமானதாகவும் இருக்குமாம்.

அறிகுறி 2உங்கள் கையில் இருக்கும் பெருவிரலுக்கு அடிப்பகுதியில் இருந்து ஆள்காட்டி விரலை நோக்கி ரேகை செல்கிறதா? அப்படியானால் உங்களிடம் பணம் சம்பாதிப்பதற்கான ஏராளமான அற்புத வழிகள் உங்கள் கைவசம் இருக்கிறதாம்.

இந்த ரேகை ஒருவர் உடனே செல்வந்தர் ஆகப் போவதையோ அல்லது வாழ்வின் எந்நேரத்திலும் செல்வந்தர் ஆகும் வாய்ப்புள்ளதையோ குறிக்காது. இருப்பினும், இந்த ரேகை, உங்களுக்கும் பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான தகுதி மற்றும் ஆற்றல் இருப்பதைக் குறிக்கிறது. எனவே நிதி நிலைமையில் வெற்றி அடைய நினைத்தால், முயற்சியைக் கைவிடாதீர்கள்.

அறிகுறி 3ஒருவரது கையில் உள்ள ரேகைகளில் பெருவிரலுக்கு அடியில் இருந்து சுண்டு விரலின் அடிப்பகுதியை நோக்கி ரேகை செல்லுமாயின், அவர்களுக்கு குடும்பத்தில் இருந்து பரம்பரை சொத்து கட்டாயம் வரும் என்பதைக் குறிக்குமாம்.

இத்தகைய ரேகை மிகவும் நீளமாக இருந்தால், வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான பணம் கிடைப்பதைக் குறிக்கும். ஒருவேளை இந்த ரேகை நீளமாகவும், ஆழமாகவும் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு கிடைக்கும் பரம்பரை சொத்து வாழ்வில் உறுதுணையாக இருக்க முடியாதாம். முக்கியமாக இந்த வகையான ரேகையைக் காண்பது மிகவும் அரிது.

அறிகுறி 4படத்தில் காட்டப்பட்டவாறு பெருவிரலின் அடிப்பகுதியில் இருந்து, நடுவிரலை நோக்கி ரேகை செல்லுமாயின், அவர்கள் சுய தொழிலில் சிறப்பானவர்களாக இருப்பர் என்பதைக் குறிக்குமாம். இந்த ரேகை மிகவும் ஆழமாக காணப்பட்டால்,

அவர்கள் செய்யும் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை தொடர்ச்சியாக காண்பர். மேலும் இந்த வகை ரேகையைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் சிறப்பான தொடர்பை கொண்டிருப்பார்கள் மற்றும் சிறந்த மார்கெட்டிங் திறனைக் கொண்டவர்களாகவும் இருப்பர்.

அறிகுறி 5ஒருவரது பெருவிரலின் அடிப்பகுதியில் நிறைய சிறு ரேகைகள் இருந்தால், அது உங்கள் வாழ்வில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கும் என்பதைக் குறிக்கும். அதிகமான ரேகையை ஒருவர் கொண்டிருந்தால், அவர்கள் அதிகளவு செல்வம் கொண்டவர்களாக இருப்பர்.

அறிகுறி 6உங்கள் உள்ளங்கையின் மேற்பரப்பும் ஒருவரது பண விஷயத்தைப் பற்றி வெளிப்படுத்துமாம். தட்டையான உள்ளங்கையைக் கொண்டவர்கள் கையில் பணம் எப்போதுமே தங்காது. வளைவான உள்ளங்கையைக் கொண்டவர்கள் கையில் பணம் அதிகம் சேருமாம். அதாவது ஒருவர் கையால் நீரை எடுக்கும் போது, உள்ளங்கையில் நீர் தேங்கினால், அவர்களது கையில் பணம் சிறப்பாக நிலைத்திருக்கும். வேண்டுமானால், நீங்களே உங்களை சோதித்துப் பாருங்கள்.

ads

Recommended For You

About the Author: Admin

Leave a Reply

Your email address will not be published.