உள்ளகையில் பல வகையான ரேகைகள், அடையாளங்கள் மற்றும் மேடுகள் உள்ளன. கையில் உள்ள ரேகைகள் ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றி நிறைய பிரதிபலிக்கின்றன. கையில் உள்ள சில ரேகைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உள்ளங்கையில் சில ரேகைகள் இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறப்படுகிறது. இத்தகைய ரேகைகளைக் கொண்டவர்கள் மகிழ்ச்சியாகவும், செல்வ செழிப்புடனும் இருப்பார்கள். இந்த ரேகைகளில் ஒன்று தான் சனி ரேகை. இக்கட்டுரையில் கையில் உள்ள சனி ரேகை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
சனி ரேகைஒருவரது கையில் உள்ள சனி ரேகை அவரது அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். கைரேகை ஜோதிடத்தின் படி, கையில் சனி ரேகையை தெளிவாக வைத்திருப்பவர்கள், வாழ்வில் நிறைய நற்பெயரைப் பெறுவதோடு, அதிர்ஷ்டம் நிறைந்தவராகவும், எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருப்பர். அதோடு சனி ரேகை இருப்பவர்களிடம் சனி பகவான் எப்போதும் அன்பாக இருப்பாராம்.
உள்ளங்கையில் சனி ரேகை எங்கு உள்ளது?சனி மேடு என்பது உள்ளங்கையில் நடுவிரலின் கீழே உள்ள பகுதியாகும். மேலும் சனி ரேகையானது கையின் நடுவில் இருந்து தொடங்கி சனி மேட்டிற்கு செல்லும். ஒருவரது கையில் சனி ரேகை எவ்வளவு தெளிவாகவும், வெட்டப்படாமலும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார் என்று கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
நற்பலனைத் தரும் சனி ரேகைஒருவரது மணிக்கட்டின் மேல் பகுதியில் இருந்து சனி ரேகை அல்லது விதி ரேகை சனி மேட்டிற்கு வெட்டப்படாமல் சென்றால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
மற்றும் அதிர்ஷ்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். முக்கியமாக இத்தகையவர்கள் சிறு வயதிலேயே வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். இவர்களிடம் செல்வம் அதிகம் சேரும்.
குரு மேட்டில் இருந்து உருவாகும் சனி ரேகைசனி ரேகை கையில் பல இடங்களில் இருந்து உருவாகிறது. கைரேகை ஜோதிடத்தின் படி, குரு மேட்டில் இருந்து சனி மேட்டை அடையும் ரேகை சனி ரேகை என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவரது கையில் இம்மாதிரியான ரேகை இருந்தால், அவர் வயதிற்கு ஏற்ப பணக்காரர் ஆவார். ஆனால் இவர்களால் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அதிகம் பயன்படுத்த முடியாது. இருப்பினும் இவர்களின் பிள்ளைகள் இவர்களுடைய பணத்தை நன்கு அனுபவிப்பார்கள்.
கடின உழைப்பாளிகள்விதி ரேகையில் இருந்து சனி மேட்டிற்கு செல்லும் ரேகை நல்ல பலனைத் தருவதாக இருக்கும். இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியைப் பெறுகிறார்கள். ஆனால் இந்த ரேகையில் பிளவு இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட ரேகையைக் கொண்டவர்களிடம் சனி பகவான் கருணை காட்டுவார்.
அதோடு இத்தகைவர்கள் கடின உழைப்பாளிகளாக ஆக்குவார். பெரும்பாலும் இத்தகையவர்கள் தங்களின் கடின உழைப்பின் மூலம் பெரிய வணிகர்களாக மாறுகிறார்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.source:boldsky