விவாகரத்து செய்துவிட்டாரா பிக் பாஸ் அபிநய் ஷாக்கிங் செய்தி – Tamil VBC

விவாகரத்து செய்துவிட்டாரா பிக் பாஸ் அபிநய் ஷாக்கிங் செய்தி

பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் ராமானுஜன், சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பாவனிக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் சர்ச்சையின் காரணமாக அபிநய்யை விட்டு, அவரது மனைவி அபர்ணா பிரிக்கிறார் என்று தகவல் வெளியானது.

அதற்கு ஏற்றாற்போல் அபிநய்யின் மனைவி, தனது கணவரின் பெயரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார். ஆனால், இது வெறும் வதந்திதான் என்று தெரிவித்திருந்தார்.பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு,பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக அபிநய் களமிறங்கினார். ஆனால், தீடீரென பிபி அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அபிநய்யிடம், ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா’ என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த அபிநய், ‘ இந்த செய்தியை கேட்டு நான் முதலில் ஷாக் ஆனேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இது உண்மை இல்லை ‘ என்று தெரிவித்துள்ளார். இதன்முலம் அபிநய் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்று தெரியவருகிறது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.