பிள்ளைகளுக்கு உணவு இல்லாமையினால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை – Tamil VBC

பிள்ளைகளுக்கு உணவு இல்லாமையினால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை

களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். 3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு வழங்க  பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அவர் வீட்டிற்கு வராமையினால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு வழங்கினேன் என தற்கொலை செய்துக் கொண்ட நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துக் கொண்டவர் வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த நாகராஜா ரஞ்சன் என்ற 37 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையாகும்.உயிரிழந்தவரின் மனைவியான 30 வயதான மாடசாமி மஞ்சுலா என்பவர், மரண பரிசோதனை அதிகாரிகளிடம் சாட்சி வழங்கியுள்ளார்.உயிரிழந்திருப்பவர் எனது கணவர், எங்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள் உள்ளனர். மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

எனது கணவருக்கு வேலை தேடி தெபுவன மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 9 மாதங்களுக்கு முன்னர் வெலிபென்ன பிரதேசத்திற்கு வந்தோம். என் கணவருக்கு நிரந்தர வேலை இல்லை. அவரை கூலி வேலைக்கு அனுப்பி அதில் கிடைத்த பணத்திலேயே வாழ்ந்தோம். நிரந்தர வீடு இல்லை. 3,500 ரூபாய் வாடகைக்கு அறையில் இருந்தோம். நிரந்தர வீடு இல்லாததால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை.

கடந்த சில நாட்களாக கணவருக்கு வேலை கிடைக்கவில்லை. எங்களுக்கு கடனுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கவில்லை. பிள்ளைகளுக்கு உணவில்லாமையினால் கணவர் வருத்தத்தில் இருந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அன்று முழு நாளும் வரவில்லை். பிள்ளைகளால் பசி தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு பெற்றுக் கொடுத்தேன்.கணவருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தினேன் பதில் கிடைக்கவில்லை. பின்னர் கணவர் உறவினரின் வீட்டிற்கு அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் என தகவல் கிடைத்தென மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.